Feb 29 Born Celebs: நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் லீப் நாளில் பிறந்த இந்திய பிரபலங்கள் யாரெல்லாம் என்பது தெரியுமா?
லீப் ஆண்டு குழந்தைகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது பிறந்தநாளை கொண்டாடுவார்கள். அந்த வகையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபலங்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்
உலகம் முழுவதும் சுமார் 5 மில்லியனுக்கும் மேற்பட்டோர் லீப் நாளில் தங்களது பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதன்படி இந்த பூமி பந்தில் இருக்கும் 8 பில்லியன் மக்கள் தொகையில் 0.06 சதவீததினர் லீப் நாளில் பிறந்தவர்களாக இருக்கிறார்கள்.
லீப் ஆண்டின் தோற்றம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாக கூறப்படுகிறது. சூரிய நாள்காட்டியுடன் நிலையான கிரிகோரியன் நாள்காட்டியை சீரமைப்பதற்கு, பூமியானது சூரியனைச் சுற்றி வருவதற்கு 365 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொள்கிறது, அதாவது 365.2422 நாட்கள் என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ளவும் இது மாற்றம் செய்யப்பட்டது.
உலகம் முழுவதும் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் நாள்காட்டியான கிரிகோரியன் நாள்காட்டியின்படி, ஒவ்வொரு லீப் வருடமும் 365 நாட்களுக்குப் பதிலாக 366 நாட்களை கொண்டுள்ளது. லீப் டே என்று அழைக்கப்படும் இந்த கூடுதல் நாள், ஒரு வானியல் ஆண்டு 365 நாட்கள் மற்றும் 6 மணிநேரத்தை விட சற்றே குறைவாக இருப்பதை சரிசெய்கிறது. கடைசி லீப் நாள் 2020இல் நிகழ்ந்தது, இதைத்தொடர்ந்து அடுத்த லீப் நாள் 2028இல் வரும்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் இந்த சிறப்பு மிக்க லீப் நாளில் பிறந்த இந்தியாவை சேர்ந்த பிரபலங்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்
மெரார்ஜி தேசாய் - சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் இந்தியப் பிரதமருமான மொரார்ஜி தேசாய் 1896ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி பிறந்தார். ஏப்ரல் 10, 1995ஆம் ஆண்டு காலமானார். மொரார்ஜி தேசாய் 99 ஆண்டுகள் உயிருடன் இருந்திருந்த போதிலும் தனது வாழ்நாளில் 24 பிறந்தநாள் மட்டுமே கொண்டாடியுள்ளார்.
பிரகாஷ் நஞ்சப்பா - ஒலிம்பிக் வீரரும் அர்ஜுனா விருது வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீரருமான பிரகாஷ் நஞ்சப்பா 1976ஆம் ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தார்.
2014ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் மற்றும் 2014 இன்சியான் ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெண்கல பதக்கம், கொரியாவில் 2016இல் நடந்த ISSF உலகக் கோப்பை மற்றும் 2013 சாங்வான் உலகக் கோப்பை உள்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
ருக்மினி தேவி - புகழ்பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞரும் கலாக்ஷேத்ராவை நிறுவியவருமான ருக்மினி தேவி 1904ஆம் ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதியன்று பிறந்தார்.