தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Leaders Comment On Rahul Gandhi Mp Disqualification

Rahul Gandhi Disqualified: ராகுல் காந்தி பதவி பறிப்பும்; தலைவர்கள் பார்வையும்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 24, 2023 03:39 PM IST

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

New Delhi, Mar 24 (ANI): File picture of Congress leader Rahul Gandhi who has been disqualified as a Member of the Lok Sabha (MP) from the date of his conviction in the criminal defamation case over his alleged 'Modi surname' remark on March 23rd. (ANI Photo)
New Delhi, Mar 24 (ANI): File picture of Congress leader Rahul Gandhi who has been disqualified as a Member of the Lok Sabha (MP) from the date of his conviction in the criminal defamation case over his alleged 'Modi surname' remark on March 23rd. (ANI Photo) (ANI)

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கிடையில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்ற பதாகையை ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் ட்விட்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுவிட்டது. இந்த நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் வீதி முதல் நாடாளுமன்றம் வரை தொடர்ந்து போராடி வருகிறார். ஜனநாயகத்தை காப்பாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். இச்சதி வேலைகளுக்கு மத்தியிலும் அவர் தொடர்ந்து போராடாடுவார் தொடர்ந்து சண்டை செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்த தலைவர்களின் கருத்து பின்வருமாறு

மல்லிகார்ஜுன கார்கே

“ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ய எல்லா வழிகளையும் பாஜக பயன்படுத்திவிட்டது; உண்மை பேசுபவர்களை அவர்கள் சும்மா விடுவதில்லை, ஜனநாயகத்தை பாதுகாக்க நாங்கள் சிறைக்கு செல்லவும் தயார்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

கே.சி. வேணுகோபால் எம்.பி.

இதேபோல் “நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக ராகுல்காந்தி கேள்வி எழுப்பிய நாளில் இருந்தே அவர் வாயை அடைக்க இதுபோன்ற சதி தொடங்கப்பட்டுவிட்டது; இது பாஜக அரசின் ஜனநாயக விரோத, சர்வாதிகாரப் போக்கின் உச்சம்" என காங்கிரஸ் எம்.பி. கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

கனிமொழி

இந்நிலையில்தூத்துக்குடி எம்பி கனிமொழி கூறியதாவது, " எத்தனையோ பிரச்சனைகளில் தூங்கிக் கொண்டே இருக்கும் பாஜக அரசு, இந்த பிரச்சனையில் இவ்வளவு வேகமாக செயல் பட்டு எதிர்க்கட்சிகள் குரலை ஒடுக்கி விட வேண்டும் என்ற அவர்களின் கடமை உணர்ச்சியை காட்டுகிறது" என்ற தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

சாதாரண மனிதர்களுக்கு ஒரு சட்டம், அரசர்களுக்கு ஒரு சட்டம் என்றில்லை. அதன் அடிப்படையிலேயே நாடாளுமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது" தூத்துக்குடியில், ராகுல் காந்தியின் பதவி நீக்கம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்பர் என்று தெரியவந்துள்ளது

IPL_Entry_Point

டாபிக்ஸ்