Laurie Baker: 'காந்தியால் இந்தியர் ஆன ஆங்கிலேயர்!’ கட்டக் கலைஞர் லேரி பேக்கர் பிறந்தநாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Laurie Baker: 'காந்தியால் இந்தியர் ஆன ஆங்கிலேயர்!’ கட்டக் கலைஞர் லேரி பேக்கர் பிறந்தநாள் இன்று!

Laurie Baker: 'காந்தியால் இந்தியர் ஆன ஆங்கிலேயர்!’ கட்டக் கலைஞர் லேரி பேக்கர் பிறந்தநாள் இன்று!

Kathiravan V HT Tamil
Mar 02, 2024 06:10 AM IST

K

கட்டடக்கலைஞர் லேரி பேக்கர்
கட்டடக்கலைஞர் லேரி பேக்கர்

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாமில் 1917ஆம் ஆண்டு 2 மார்ச் ஆம் தேதி பிறந்த லேரி பேக்கர் கட்டக்கலைத்துறையில் பட்டம் பெற்றார், இருப்பினும் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் ஆம்புலன்ஸ் குழுவில் இருந்தார். பின்னர் மருத்துவ சிகிச்சை நிபுணராக சீனாவுக்கு அனுப்பப்பட்டார். 

1943ஆம் ஆண்டு அவர் இங்கிலாந்துக்கு திரும்ப திட்டமிட்டார். ஆனால் இதனால் பம்பாய்க்கு வந்த நிலையில் அவர் செல்ல வேண்டிய கப்பல் 3 மாத தாமத்தத்தை ஏற்படுத்தியதால் அவருக்கு இந்தியாவில் தங்க வேண்டிய நிலை உருவானது. பேக்கரின் நண்பர் மகாத்மா காந்திக்கு நண்பராக இருந்ததால், காந்தியின் பேச்சுக்களை கேட்கத் தொடங்கினார். காந்தி நடத்தும் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்து கொண்டார். 

ஒரு இடத்தில் இருந்து ஐந்து மைல் சுற்றளவில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வீடு கட்டுவது சாத்தியமாக வேண்டும் என்பது காந்தியின் எண்ணமாக இருந்தது. இது லேரி பேக்கரின் பிற்கால வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழுநோய் மருத்துவமனை கட்டடங்களில் பணியாற்றுவதற்காக லேரி பேக்கர் சென்றார்.  பழங்குடி கலாச்சாரங்களின் கட்டிடக்கலை மற்றும் கடந்த தலைமுறைகளின் ஞானத்தால் ஈர்க்கப்பட்ட அவர், கட்டிடக்கலைக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான உறவை மறுவரையறை செய்யும் பணியில் இறங்கினார்.

பேக்கரின் நெறிமுறையின் மையமானது உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதாகும். வறண்ட தென்மேற்கில் உள்ள அடோப் முதல் பசிபிக் வடமேற்கில் உள்ள மரம் வரை, அவர் பிராந்திய வளங்களின் உள்ளார்ந்த குணங்களைப் பயன்படுத்தி, அவற்றின் சுற்றுப்புறங்களுடன் இணக்கமான வீடுகளை வடிவமைக்கிறார். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான நம்பிக்கையைத் தவிர்ப்பதன் மூலம், பேக்கர் கட்டுமானத்தின் கார்பன் தடயத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் பொருளாதாரங்களை ஆதரிக்கிறது மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கிறது.

உத்தரகண்ட்டின் பித்தோராக்கர், கேரளாவின் வாகமன் மற்றும் திருவனந்தபுரத்தில் குடியிருந்து உள்ளூர் மக்களூடன் பேக்கர் தொடர்பு கொண்டார். 1988ஆம் ஆண்டு லாரி பேக்கர் இந்திய குடியுரிமையையும் பெற்றார். 

பேக்கர் மலைப்பகுதிகளில் நிறைய பள்ளிகள், தேவாலயங்கள், மருத்துவமனைகளை கட்டினார். அவரது செலவு குறைந்த கட்டக்கலை முறை குறித்த தகவல்கள் பரவியதும், சமவெளிகளில் இருந்து அதிகம் பேர் அவரை தொடர்பு கொண்டனர். 

பேக்கரின் மிகவும் குறிப்பிடத்தக்க திட்டங்களில் ஒன்று, ராம்ட் எர்த் கட்டுமானத்துடன் அவர் செய்த பணியாகும். இந்த பழங்கால கட்டிட நுட்பத்தை தழுவி, அவர் நீடித்த மற்றும் ஆற்றல் திறன் கொண்ட கட்டமைப்புகளை உருவாக்கினார்.  

நிழல் மற்றும் இயற்கை காற்றோட்டம் உத்திகள் மூலம், அவரது வீடுகள் செயற்கை குளிரூட்டிகளின் தேவையை குறைத்தன. இது பாரம்பரிய திறன்களைப் பாதுகாப்பதை உறுதி செய்வது மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களின் கலாச்சார அடையாளத்தை பிரதிபலிக்கும் இடங்களை பாதுகாப்பதாக மாற்றியது. 

அவரது கட்டடக்கலை சேவைகளை பாராட்டும் வகையில் 1990ஆம் ஆண்டு லேரி பேக்கருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 2007ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று தனது 90ஆவது வயதில் திருவனந்தபுரத்தில் லேரி பேக்கர் காலமானார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.