தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Landlord Cuts Woman's Body Into Six Pieces In Hyderabad

Murder : ஐயோ நெஞ்சே பதறுதே.. பெண்ணின் தலையை துண்டித்த கொடூரன்.. ஃபிரிட்ஜில் 6 துண்டு உடல் பாகங்கள்.. என்ன நடந்தது?

Divya Sekar HT Tamil
May 26, 2023 07:02 AM IST

பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக உடல் பாகங்கள் வெட்டி பிளாஸ்டிக் கவரில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்த சம்பவம் ஹைதராபாத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் கொடூர கொலை
பெண் கொடூர கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

அனுராதாவுக்கும் சந்திர மோகனுக்கும் இடையே ஏற்பட்ட பணத்தகராறு காரணமாக இந்த கொலை அரங்கேறியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து சந்திரமோகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்துள்ளன. அதன்படி சந்திர மோகன், மே 12ஆம் தேதியே அனுராதாவை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். அதன் பிறகு கல் வெட்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி அவரது உடலை 6 பகுதிகளாக வெட்டி அவற்றை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

அதுவரை துர்நாற்றம் எதுவும் வீசாமல் இருக்க உடல் பாகங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து, பாதுகாத்து வந்துள்ளார். மேலும் நாற்றம்வராமல் இருக்க ரூம் ஃப்ரெஷ்னரை பயன்படுத்தியுள்ளார். அனுராதாவின் தலையை ஒரு கருப்பு பாலித்தீன் கவரில் வைத்து, குப்பைக் கிடங்கில் வீசியதையும் ஒப்புக் கொண்டார். மே 17ஆம் தேதி துப்புரவு பணியாளர் அதை கண்டுபிடித்துள்ளார்.

சந்திர மோகன் அனுராதாவுடன் உறவு கொண்டிருந்தார். அவரது வீட்டின் கீழ் தளத்தில் ஒரு பகுதியில் அவருக்கு தங்கும் வசதி செய்து கொடுத்தார். அனுராதா ஒரு கந்து வட்டிக்காரர். சந்திர மோகன் அனுராதாவிடம் சுமார் ரூ 7 லட்சம் வரை கடன் வாங்கியிருந்தார். கடனை திருப்பிச் செலுத்துமாறு அனுராதா அவருக்கு அழுத்தம் கொடுத்ததால், அனுராதாவை கொலை செய்ய திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார். மே 12ஆம் தேதி பணப்பிரச்சனை காரணமாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதில் சந்திரமோகன், அனுராதாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதில் அனுராதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அனுராதாவை கொலை செய்த பின்னர் அவரது உறவினர்களுக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தினமும் அவரது போனில் இருந்து மெசேஜ் அனுப்பி பேசி வந்துள்ளார்.

கொலைக்கு பின்னர் டெட்டால் , பெனாயில் வீட்டை சுத்தம் செய்துள்ளார். எந்த துர்நாற்றமும் வீசக்கூடாது என்பதற்காக ஊதுபத்தி, சாம்பராணி தினமும் பற்ற வைத்து வந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக டெல்லியில் அஃப்தாப் பூனாவாலா தனது காதலி ஷ்ரதா வால்கரை கொன்று உடலை 33 துண்டு துண்டாக வெட்டி வனப்பகுதியில் வீசிய சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. பின்னர் உத்தரபிரதேசத்தில் காதலியை முன்னாள் காதலன் ஆறு துண்டாக வெட்டி கிணற்றில் வீசிய சம்பவமும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது ஹைத்ராபாத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்