தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kuwait Fire Accident:பாதுகாப்பு நடவடிக்கையில் கவனக்குறைவு! எரியக்கூடிய பொருள்களால் பரவிய தீ- முதல்கட்ட விசாரணையில் தகவல்

Kuwait Fire Accident:பாதுகாப்பு நடவடிக்கையில் கவனக்குறைவு! எரியக்கூடிய பொருள்களால் பரவிய தீ- முதல்கட்ட விசாரணையில் தகவல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 14, 2024 10:45 AM IST

குவைத் தீ விபத்து முதல்கட்ட விசாரணையில், பாதுகாப்பு நடவடிக்கையில் உள்ள கவனக்குறைவு தெரியவந்துள்ளது. எரிவாயு சிலிண்டர்கள், எரியக்கூடிய பொருட்கள் மற்றும் பூட்டப்பட்ட கதவுகள் ஆகியவை தொழிலாளர்கள் தப்பிச் செல்வதைத் தடுத்துள்ளன. நெரிசலான இடங்களில் இருந்த எரியக்கூடிய பொருட்களால் தீ வேகமாக பரவியுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனக்குறைவு, எரியக்கூடிய பொருள்கள் பரவிய தீ என முதல்கட்ட விசாரணையில் தகவல்
பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனக்குறைவு, எரியக்கூடிய பொருள்கள் பரவிய தீ என முதல்கட்ட விசாரணையில் தகவல் (PTI)

45 இந்தியர்களின் உயிரைப் பறித்த குவைத் தீ விபத்து குறித்த ஆரம்ப விசாரணையில் கவனக்குறைப்பு நடவடிக்கைகளும், தீ பற்றி எரியக்கூடிய பொருள்கள் இருந்ததும், நெரிசலான இடங்களில் கதவு பூட்டப்பட்டிருந்ததால் தொழிலாளர்கள் தப்பி செல்வதைம் தடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

எரியக்கூடிய பொருள்களால் பரவிய தீ விபத்து

ஆதாரங்களை மேற்கோள் காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், "ஏழு மாடி கட்டமைப்பின் தரை மட்டத்தில் சுமார் இரண்டு டஜன் எரிவாயு சிலிண்டர்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. காகிதம், அட்டை பிளாஸ்டிக் போன்ற எளிதில் தீ பற்றி எரியக்கூடிய பொருள்களும் அதிகமாக இருந்துள்ளன. 

தொழிலாளர்களுக்கு நெரிசலான இடங்களில் தற்காலிக பகிர்வுகளாக பயன்படுத்தியது, மற்றும் பூட்டப்பட்ட கதவுகள் தொழிலாளர்கள் தப்பி ஓடும் வாய்ப்பு தடுக்கப்பட்டது.

இந்த விபத்தில் உயிர் தப்பியவர்களுடன் இந்திய தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகிறார்கள். இதற்கிடைய இந்த விபத்து தொடர்பாக  குவைத் புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது. 

ட்ரெண்டிங் செய்திகள்

அதிகாரிகள் ஏற்கனவே அடையாளம் காணும் செயல்முறையின் ஒரு பகுதியாக உடல்களில் டி.என்.ஏ சோதனைகள் நடத்தியுள்ளனர்.

மின்சார கசிவால் ஏற்பட்ட விபத்து

தரை தளத்தில் ஏற்பட்ட ஷார்ட்-சர்க்யூட் காரணமாக ,சுமார் இரண்டு டஜன் சேமிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் சமையலறையில் தீ விபத்து ஏற்பட தொடங்கியதாக கூறப்படுகிறது. 

அங்கிருந்த அட்டை, காகிதம் மற்றும் பிளாஸ்டிக் போன்ற ஏராளமான எரியக்கூடிய பொருள்களால் தீ வேகமாக பரவியுள்ளது. அவை கட்டிடத்துக்குள் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட அறைகளைப் பிரிக்க பயன்படுத்தப்பட்டன.

கூடுதலாக, இப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிக இடத்தை உருவாக்குவதற்கு ஏதுவாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது குவைத் நாட்டின் கட்டிட குறியீடுகளின் விதிகளை மீறியதாக இருப்பதுடன்,  தீயணைப்பு முயற்சிகளுக்கு இடையூறு விளைவிப்பதாக அமைந்திருந்தது. 

மின்கசிவு காரணமாக இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாக குவைத் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஒரு செய்திக்குறிப்பில், சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்த பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாக குவைத் செய்தி நிறுவனமனம் தெரிவித்துள்ளது.

அல்-மங்காஃப் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் அல்-அஹ்மதி கவர்னரேட்டில் உள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், பெரும்பாலான இறப்புகள் கரும்புகையை சுவாசித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு நிகழ்ந்ததாகவும் குவைத் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கட்டுமான நிறுவனமான என்.பி.டி.சி குழுமம் 195க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்குவதற்காக கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துள்ளது. இங்கு பணியாற்றிவர்களில் பெரும்பாலோர் கேரளா, தமிழ்நாடு மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த இந்தியர்களாக இருந்துள்ளனர்.

குவைத் நாட்டின் உள்துறை அமைச்சர் அல்-சபா தீ விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, அல்-மங்காஃப் கட்டிடத்தின் உரிமையாளர் மற்றும் காவலாளியை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், என்.எஸ்.ஏ அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா மற்றும் பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா ஆகியோருடன் பிரதமர் மோடி நிலைமையை ஆய்வு செய்தார்.

இந்த கூட்டத்தைத் தொடர்ந்து, இறந்த இந்தியர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ .2 லட்சம் இழப்பீடு நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார், மேலும் அரசாங்கம் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.