தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Kuno Park Female Cheetah Dies In Kuno Park Due To Kidney Failure

Kuno Park : சிறுநீரக செயலிழப்பால் குனோ பூங்காவில் பெண் வேங்கைப்புலி உயிரிழப்பு

Priyadarshini R HT Tamil
Mar 28, 2023 09:33 AM IST

Female Cheetah : நமீபியாவில் இருந்து குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட வேங்கைப்புலி சிறுநீரக கோளாறு காரணமாக இறந்துவிட்டது.சஷா என்ற ஐந்தரை வயது வேங்கைப்புலி நமீபியாவில் இருந்து முதல் பேட்ச்சில் கொண்டுவரப்பட்டது. அது நேற்று சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தது என்று அதிகாரிகள் கூறினார்கள்.

சஷா என்ற வேங்கைப்புலி நேற்று காலை இறந்தது
சஷா என்ற வேங்கைப்புலி நேற்று காலை இறந்தது

ட்ரெண்டிங் செய்திகள்

விலங்குகளில் பொதுவாக ஏற்படும் சிறுநீரக கோளாறு சஷாவுக்கு ஏற்பட்டிருந்தது. இதற்காக ஜனவரி மூன்றாம் வாரத்தில் இருந்து அதற்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. மத்திய பிரதேசத்தின் ஷியோப்பூரில் உள்ள குனோ தேசிய பூங்காவில் அழிந்து வரும் வேங்கைப்புலி இனங்கள் தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. 

வேங்கைப்புலிகள் பாதுகாப்பு நிதி செய்தி தொடர்பாளர் சூசன் எந்நெட்டி கூறுகையில், ‘சஷா நேற்று காலை 8 மணியளவில் உயிரிழந்தது. அது சிறுநீரக கோளாறால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்ப்படுகிறது‘ என்றார். நமீபியாவைச் சேர்ந்த வனவிலங்கு தன்னார்வத்தொண்டு நிறுவனம் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெரிய பூனை வகையினங்களை இந்தியாவிற்கு இடம்பெற்றன. 

சஷா இடம் மாற்றப்படுவதற்கு முன்னரே, சஷா, சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தது என மத்திய பிரதேச வனத்துறை தெரிவித்துள்ளது. அதற்கு உடல்நிலை குறைபாடு இருந்தது ஜனவரி 22ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அது சோர்வாக காணப்பட்டது. தொடர்ந்து சஷாவை 3 விலங்குகள் மருத்துவர்கள் பரிசோதனை செய்தார்கள். அவர்கள் சஷாவுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்று அறிவுறுத்தியவுடனே அது தனிமை முகாமுக்கு அன்றே அழைத்துவரப்பட்டதாக வனத்துறை தெரிவித்தது. 

போபாலில் உள்ள வான் விஹாரில் தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட ரத்தப்பரிசோதனையில் சஷா என்ற அந்த பெண் வேங்கைபுலிக்கு சிறுநீரக தொற்றுகள் ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டது. 

குனோவில் உள்ள விலங்கு மருத்துவர்கள் அனைவரும் சஷாவுக்கு சிகிச்சையளித்து அதை நன்றாக கவனித்துக்கொண்டார்கள். நமீபியாவைச் சேர்ந்த டாக்டர் இலய் வாக்கர் மற்றும் தென் ஆப்பிரிக்க நிபுணர் டாக்டர் அட்ரியன் டார்டிப், விலங்கு நிபுணர் டாக்டர் லாரி மார்க்கர் ஆகியோர் பிப்ரவரி 18ம் தேதி குனோ தேசிய பூங்காவுக்கு வந்தார்கள். அங்குள்ள அனைத்து வேங்கை புலிகளின் உடல்நிலையையும் பரிசோதித்தார்கள். சஷாவின் உடல்நிலை குறித்தும் பரிசோதித்தார்கள். சஷாவுக்கு ஏற்பட்டிருந்த கடுமையான உடல் நலக்குறைபாட்டிலும், அது ஆரோக்கியமாகவே இருந்தது. அதற்கு நாம் வழங்கிய சரியான கவனிப்பு மற்றும் முறையான சிகிச்சைகளும்தான் காரணம் என்று தென்ஆப்பிரிக்க நிபுணர்கள் நம்மை பாராட்டியதாக வனத்துறை தெரிவித்துள்ளது. 

ஹெச்டியிடம் பேசிய வேங்கைப்புலிகள் காப்பக அதிகாரி ஒருவர் கூறுகையில், பிப்ரவரியில் தொற்று உறுதி செய்யப்பட்ட சஷா தனிமை பகுதியில் வைத்து பராமரிக்கப்பட்டு, அதன் உடல்நிலை சீராகி வந்தது. பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்த வேங்கைப்புலியின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடைபெற்றது. ‘வேங்கைபுலிகளுக்கு இது அடிக்கடி ஏற்படும். இதனால்தான் இவை மென்மையான விலங்குகள். இவற்றிற்கு சிறுநீரக கோளாறுகள் அடிக்கடி ஏற்படும் வாய்ப்புள்ளது‘ என்று சூசன் கூறினார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்