Five Terrorists: குல்காம் என்கவுன்ட்டர்: காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் பலி
ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறையின் கூற்றுப்படி, குல்காம் மாவட்டத்தின் டிஹெச் போரா பகுதியின் சாம்னோ பாக்கெட்டில் வியாழக்கிழமை பிற்பகல் என்கவுன்ட்டர் வெடித்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை இறுதி கட்டத்தில் உள்ளது எனவும், கொல்லப்பட்ட பயங்கரவாதியின் அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறையின் கருத்துப்படி, ’’ குல்காம் மாவட்டத்தின் டிஹெச் போரா பகுதியின் சாம்னோ பாக்கெட்டில் நேற்று(நவம்பர் 16) பிற்பகல் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது.
நவம்பர் 16 முதல் நடைபெற்ற மோதல் இரண்டாவது நாளை எட்டியுள்ளது. அதில் குல்காம் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் ஆகிய பாதுகாப்புப் படையினரால் ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டன. இறுதிகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று காஷ்மீர் மண்டல காவல்துறை Xபதிவில் தெரிவித்துள்ளது.
