Kittur Chennamma Memorial Day: ஆங்கிலேயரை தீரத்துடன் எதிர்த்துப் போராடிய கிட்டூர் சென்னம்மா நினைவு நாள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kittur Chennamma Memorial Day: ஆங்கிலேயரை தீரத்துடன் எதிர்த்துப் போராடிய கிட்டூர் சென்னம்மா நினைவு நாள்

Kittur Chennamma Memorial Day: ஆங்கிலேயரை தீரத்துடன் எதிர்த்துப் போராடிய கிட்டூர் சென்னம்மா நினைவு நாள்

Manigandan K T HT Tamil
Feb 21, 2024 06:00 AM IST

கிட்டூர் சென்னம்மா 1778 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி, இந்தியாவின் தற்போதைய கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள காகதி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.

கிட்டூர் ராணி சென்னம்மா
கிட்டூர் ராணி சென்னம்மா (@VertigoWarrior)

கிட்டூர் சென்னம்மா 1778 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி, இந்தியாவின் தற்போதைய கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள காகதி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த இவர் சிறுவயதிலிருந்தே குதிரையேற்றம், வாள் சண்டை, வில்வித்தை போன்றவற்றில் பயிற்சி பெற்றார். அவர் தேசாய் குடும்பத்தைச் சேர்ந்த ராஜா மல்லசர்ஜாவை 15 வயதில் திருமணம் செய்து கொண்டார்.

சென்னம்மாவின் கணவர் 1816 இல் இறந்தார், இந்த தம்பதிக்கு ஒரு மகன். 1824 இல் அவரது மகனும் இறந்தார். ராணி சென்னம்மாவுக்கு கிட்டூரை ஆங்கிலேயர்களிடம் இருந்து அதன் சுதந்திரத்தை தக்கவைக்க தனித்து நின்றார். தனது கணவர் மற்றும் மகன் இறந்ததைத் தொடர்ந்து, ராணி சென்னம்மா 1824 ஆம் ஆண்டு சிவலிங்கப்பாவை தத்தெடுத்து அரியணைக்கு வாரிசாக வைத்தார். இதை விரும்பாத ஆங்கிலேயர்கள், சிவலிங்கப்பாவை நாடு கடத்த உத்தரவிட்டனர். இதை சென்னம்மா ஏற்கவில்லை.

1823 ஆம் ஆண்டில், ராணி சென்னம்மா பம்பாய் மாகாணத்தின் லெப்டினன்ட்-கவர்னர் மவுண்ட்ஸ்டுவர்ட் எல்பின்ஸ்டோனுக்கு ஒரு கடிதம் அனுப்பினார், ஆனால் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, மேலும் போர் வெடித்தது.

ராணி சென்னம்மா தனது துணைத் தலைவரான சங்கொல்லி ராயண்ணாவின் உதவியுடன் கடுமையாகப் போராடினார், ஆனால் இறுதியில் சிறைபிடிக்கப்பட்டு பைல்ஹொங்கல் கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டார், அங்கு அவர் பிப்ரவரி 21, 1829 அன்று உடல்நலக் குறைவால் இறந்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.