தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Kharge Appointed As India Alliance President

INDIA: இந்தியா கூட்டணி தலைவராக கார்கே நியமனம்: ஒருங்கிணைப்பாளர் பதவியை நிராகரித்த நிதீஷ்குமார்

Marimuthu M HT Tamil
Jan 13, 2024 06:01 PM IST

இந்தியா கூட்டணி கூட்டத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, புறக்கணித்தார். அது ஏன் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து பார்ப்போம்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே (கோப்பு படம்)
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே (கோப்பு படம்)

ட்ரெண்டிங் செய்திகள்

இதனிடையே, அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்தை எட்டினால் மட்டுமே அந்த பொறுப்பை ஏற்பேன் என்று கூறி அப்பதவியை அனைவரது ஒத்துழைப்பின்பேரில் பெற்றார். மேலும், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், அதில் இருந்து விலகினார்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

காணொலி வாயிலாக, இன்று நடந்த இந்த மெய்நிகர் கூட்டத்தில், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நிதீஷ் குமாரையும், எதிர்க்கட்சிக் குழுவின் தலைவராக கார்கேவையும் பெரும்பாலான கட்சிகள் ஆதரித்தன.

ஆனால், கூட்டத்தை புறக்கணித்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நிதீஷ் குமாரை தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கும் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். பின், தான் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டதில்லை என்று நிதீஷ் குமார் கூறியுள்ளார்.

ஐக்கிய ஜனதா தளப் பிரதிநிதிகளும், அக்கட்சியின் தலைவர் லாலன் சிங்கும் இந்த முடிவால் அதிருப்தி அடைந்தனர். 16 மணி நேரத்திற்கு முன்பே தனக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியதால், மம்தா பானர்ஜி கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்.

சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் நேற்று முன்தினம் டெல்லி சென்றிருந்தார். சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரேவும் மெய்நிகர் சந்திப்பை புறக்கணித்தார்.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு, பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பது மற்றும் பிற பிரச்னைகள் குறித்து மறுஆய்வு செய்வதற்காக இந்த கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் திங்களன்று தனது பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்குவதாகவும், மற்ற அனைத்து கட்சிகளும் தங்கள் மாநிலங்களில் பங்கேற்க வேண்டும் என்றும் கூட்டணிக் கட்சிகளிடம் தெரிவித்தார்.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு கார்கேவின் பெயரும், ஒருங்கிணைப்பாளராக நிதீஷ் குமாரின் பெயரும் முன்மொழியப்பட்டன.

ஆனால், நிதீஷ் குமார் தனது ஆட்சேபத்தை வெளிப்படுத்தினர். இதனால், மற்ற உறுப்பினர்கள் உடனடியாக அறிவிப்பை வெளியிட வேண்டுமா என்று விவாதித்தனர். மம்தா பானர்ஜி மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரும் பங்கேற்காததால் இது பொருத்தமாக இருக்காது என்றும், 14 உறுப்பினர்களும் இந்த முடிவுக்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் அப்போது சுட்டிக்காட்டப்பட்டது.

கோபமடைந்த ஐக்கிய ஜனதா தள தலைவர் லாலன் சிங், இந்த நியமனத்தை ஐக்கிய ஜனதா தளம் எதிர்க்கிறது. எனவே காங்கிரஸ் வேறு ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் கூறினார். 

எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பாளராக நிதீஷ் குமாரை நியமிப்பதற்கு மம்தா பானர்ஜியை சம்மதிக்க வைக்குமாறு கெஜ்ரிவால் மற்றும் சரத் பவாரை கேட்டுக் கொள்ளப்பட்டதாக கூட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு தலைவர்கள் இந்துஸ்தான் டைம்ஸிடம் தகவலைப் பகிர்ந்தனர். 

இதனிடையே, பீகாரில் நிதீஷ் குமாரின் கூட்டணிக் கட்சிகளான லாலு பிரசாத் யாதவும், தேஜஸ்வி யாதவும் இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்க நிதீஷ் குமாரை சம்மதிக்க வைப்பார்கள் எனத் தெரிகிறது.

 

WhatsApp channel

டாபிக்ஸ்