தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Kerala Plans Passenger Ship Service To Gulf To Beat Exorbitant Air Charges

வளைகுடா மலையாளிகளுக்கு இன்ப அதிர்ச்சி! மலிவு விலையில் கப்பல் சேவையை தொடங்கும் பினராயி விஜயன்!

Kathiravan V HT Tamil
Jun 01, 2023 04:56 PM IST

”துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் மலையாளிகள் தங்களுடைய சொற்ப சேமிப்பில் கணிசமான தொகையை விமான பயணத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்”

கப்பல் சேவை - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் - கோப்புப்படம்
கப்பல் சேவை - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் - கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் மலையாளிகளுக்கு மலிவு விலையில் பயணம் செய்யும் வகையில் வளைகுடா நாடுகளின் கடலோரப் பகுதிகளுக்கு இடையே பயணிகள் கப்பல் சேவையை தொடங்க பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற புதன்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், கேரளா மற்றும் வளைகுடா இடையே பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்குவதற்கான திட்டத்தை வகுக்க முடிவு செய்ததாக மாநில துறைமுக துறை அமைச்சர் அகமது தேவர்கோவில் தெரித்துள்ளார்.

கேரள துறைமுக துறை அமைச்சர் அகமது தேவர்கோவில்
கேரள துறைமுக துறை அமைச்சர் அகமது தேவர்கோவில்

பண்டிகைக் காலங்களில் பயணம் செய்வதற்கு விமான நிறுவனங்கள் அதிகப்படியான பணத்தை வசூலிப்பதாக தெரிவித்த அமைச்சர் அகமது தேவர்கோவில், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் வசிக்கும் மலையாளிகள் தங்களுடைய சொற்ப சேமிப்பில் கணிசமான தொகையை விமான பயணத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

மலபார் மேம்பாட்டு கவுன்சில் மற்றும் கேரள கடல்சார் வாரியம் ஏற்பாடு செய்திருந்த உயர்மட்டக் கூட்டத்தில் இந்தத் திட்டம் திட்டமிடப்பட்டதாக தெரிவித்த அவர், கேரள இனத்தின் புலம்பெயர்ந்தோரின் அதிகாரபூர்வ அமைப்பான நோர்கா (NORKA)-வின் ஒத்துழைப்புடன் கப்பல் சேவையை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

இது தொடர்பாக அவரது முகநூல் பதிவில் அமைச்சர் கூறியிருப்பதாவது: வெளிநாட்டவர்களின் பயணப் பிரச்சனைகளைத் தீர்க்க எல்.டி.எஃப் அரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகையையும் பயன்படுத்தி கப்பல் சேவையை தொடங்க யோசனை உள்ளது என்றார்

WhatsApp channel

டாபிக்ஸ்