‘நாய் தொல்லை தாங்க முடியல..’ பிரதமர் மோடியை சந்தித்து கார்த்தி சிதம்பரம் கோரிக்கை!
‘இன்று நாடாளுமன்ற அலுவலகத்தில் மாண்புமிகு பிரதமரைச் சந்தித்து, தெருநாய்களால் ஏற்படும் வளர்ந்து வரும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு கவலைகளை அவரது கவனத்திற்கு கொண்டு வந்தேன்’

‘நாய் தொல்லை தாங்கு முடியல..’ பிரதமர் மோடியை சந்தித்து கார்த்தி சிதம்பரம் கோரிக்கை!
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்.பி.,யுமான கார்த்தி சிதம்பரம், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது அவர் என்ன கோரிக்கை வைத்தார் தெரியுமா? இதோ அவர் பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கை குறித்து, அவருடைய எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள கருத்து:
"இன்று நாடாளுமன்ற அலுவலகத்தில் மாண்புமிகு பிரதமரைச் சந்தித்து, தெருநாய்களால் ஏற்படும் வளர்ந்து வரும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு கவலைகளை அவரது கவனத்திற்கு கொண்டு வந்தேன். இந்தியா உலகளவில் மிகப்பெரிய தெருநாய் எண்ணிக்கையை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இங்கு 6.2 கோடிக்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளன.