தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Karnataka Election: Karnataka Cong Chief Making Phone Calls To Bjp Mlas Offering Tickets: Cm Bommai

Karnataka Election: MLA-க்களை இழுக்க காங்கிரஸ் சதி! கதறும் பொம்மை! பதறும் பாஜக!

Kathiravan V HT Tamil
Mar 29, 2023 12:54 PM IST

Karnataka Election: நாடு முழுவதும் மாற்றுக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களை தங்கள் வசம் இழுப்பதாக பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் பாஜக எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சி நடப்பதாக பாஜக முதல்வரே காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி உள்ளது அரசியல் களத்தில் அனலை கிளப்பி உள்ளது.

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை - கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார்
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை - கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

வேட்புமனுத்தாக்கல் செய்ய ஏப்ரல் 20ஆம் தேதி கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 21ஆம் தேதி நடந்து அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மே 10ஆம் தேதி பதிவான வாக்குகள் அனைத்தும் மே 13ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 36 தனித்தொகுதிகளும் 15 பழங்குடியினர் தொகுதிகளும் உள்ளது. கர்நாடகாவில் 2.62 கோடி ஆண் வாக்காளர்கள், 2.59 கோடி பெண் வாக்காளர்கள் என 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி - கருத்துக்கணிப்பு

பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சியே அங்கு ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் 124 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை கடந்த மார்ச் 25ஆம் தேதி அறிவித்து தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி முடுக்கிவிட்டுள்ளது.

அறிவிப்புகளை அள்ளிவீசும் காங்கிரஸ்

படித்த இளைஞர்களை கவரும் வண்ணம் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு மாதம் 3000 ரூபாய் உதவித்தொகையும் டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் உதவித்தொகையும் வழங்கும் யுவநிதி திட்டமும்,

குடும்ப தலைவிகளின் ஆதரவை பெறும் நோக்கில் 'க்ருஹ லக்ஷ்மி' என்ற திட்டத்தின் படி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் நிதி உதவி திட்டத்தையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

'க்ருஹ ஜோதி' என்ற திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் ‘அன்ன பாக்யா’ என்ற திட்டத்தில் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ஏப்ரல் முதல் வாரத்தில் பாஜக வேட்பாளர் பட்டியல்

இதனிடையே கர்நாடக மாநிலம் பெலகாவியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியில் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.எல்.ஏக்களை இழுக்க சதி

மேலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிக்காமல் உள்ள 100 தொகுதிகளில் போட்டியிட எங்கள் எம்.எல்.ஏக்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் போன் செய்து பேசி வருவதாகவும் பசவராஜ் பொம்மை குற்றம்சாட்டி உள்ளார்.

காங்கிரஸ் தலைவர்கள் விரக்தியில் உள்ளதாகவும் சரியான வேட்பாளர்கள் இல்லாததால் சிவக்குமார் எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க முயல்வதாகவும், இது காங்கிரஸ் கட்சி திவால் ஆகி உள்ளதை காட்டுவதாகவும் பொம்மை தெரிவித்தார்.

நாடு முழுவதும் மாற்றுக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களை தங்கள் வசம் இழுப்பதாக பாஜக மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் பாஜக எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சி நடப்பதாக பாஜக முதல்வரே காங்கிரஸ் மீது குற்றம்சாட்டி உள்ளது அரசியல் களத்தில் அனலை கிளப்பி உள்ளது.

WhatsApp channel