தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Karnataka Election 2023 : Yediyurappa Rules Out His Son Contesting From Varuna, Says He Will Enter Fray From Shikaripura

’சித்தராமையாவை எதிர்த்து என் மகன் போட்டியிடமாட்டார்’ எடியூரப்பா திட்டவட்டம்!

Kathiravan V HT Tamil
Apr 01, 2023 10:09 AM IST

Karnataka Election 2023:- அவர் மைசூருவில் வருணா தொகுதியில் போட்டியிடும் கேள்விக்கே இடமில்லை - எடியூரப்பா

மகன் விஜயேந்திரா உடன் எடியூரப்பா - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா
மகன் விஜயேந்திரா உடன் எடியூரப்பா - கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமைய்யா

ட்ரெண்டிங் செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் ஒரே கட்டமாக வரும் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 

இந்த நிலையில் “வருணா தொகுதியில் விஜயேந்திரரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று ஏற்கனவே அழுத்தம் உள்ளது, ஆனால் அவர் ஷிகாரிபுராவில் போட்டியிட வேண்டும் என்று நான் நீண்ட காலத்திற்கு முன்பே கூறியுள்ளேன். 

எனவே, எக்காரணம் கொண்டும் வருணாவில் விஜயேந்திரர் போட்டியிடும் பேச்சுக்கே இடமில்லை என பாஜக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

விஜயேந்திரர் "எனது தொகுதியில்" (சிவமொகா மாவட்டத்தில் உள்ள ஷிகாரிபுரா) போட்டியிடுவார், எனவே அவரை வருணாவில் போட்டியிடச் சொல்வதில் எந்த கேள்வியும் இல்லை என்று எடியூரப்பா கூறினார். பாரதிய ஜனதா கட்சிக்கு சொந்த பலம் இருப்பதாகவும், கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் விஜயேந்திரர் கூறியது குறித்த கேள்விக்கு,

“அவரது கூற்று சரியானது, ஆனால் அவர் ஷிகாரிபுராவில் போட்டியிடுவார் என்று நான் கூறுகிறேன் என்றும் எடியூரப்பா கூறினார். இதை கட்சி மேலிடத்திடமும், விஜயேந்திரரிடமும் தெரிவிப்பேன். அவர் மைசூருவில் வருணா தொகுதியில் போட்டியிடும் கேள்விக்கே இடமில்லை என தெரிவித்துள்ளார்.

ஷிகாரிபுரா தொகுதியில் எம்எல்ஏவாக இருக்கும் எடியூரப்பா, ஏற்கனவே தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

WhatsApp channel

டாபிக்ஸ்