தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Karnataka Election 2023: Karnataka Election Polling To Be Held On May 10 - Chief Election Commissioner Rajiv Kumar Announces

karnataka Election 2023: மே 10இல் கர்நாடக தேர்தல் மே 13இல் வாக்கு எண்ணிக்கை!

Kathiravan V HT Tamil
Mar 29, 2023 12:09 PM IST

ஒரு வாக்கு சாவடியில் 883 பேர் வாக்களிக்கும் வகையில் 58,282 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

கர்நாடக மாநில தலைமைச்செயலகம் மற்றும் சட்டப்பேரவை
கர்நாடக மாநில தலைமைச்செயலகம் மற்றும் சட்டப்பேரவை

ட்ரெண்டிங் செய்திகள்

கர்நாடகாவில் 2.62 கோடி ஆண் வாக்காளர்கள், 2.59 கோடி பெண் வாக்காளர்கள் என 5.21 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 36 தனித்தொகுதிகளும் 15 பழங்குடியினர் தொகுதிகளும் உள்ளது.

ஒரு வாக்கு சாவடியில் 883 பேர் வாக்களிக்கும் வகையில் 58,282 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கர்நாடகா தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் மே மாதம் 10 ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 13ஆம் தேதியும் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏப்ரல் 13ஆம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் தொடங்கும் நிலையில் ஏப்ரல் 20ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என்றும் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 24ஆம் தேதி கடைசிநாள் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்துள்ளார்.

WhatsApp channel