தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Haryana: இனி ஜீன்ஸ்,டீ-சர்ட் அணிய கூடாது-அரசு மருத்துவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு!

Haryana: இனி ஜீன்ஸ்,டீ-சர்ட் அணிய கூடாது-அரசு மருத்துவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு!

Divya Sekar HT Tamil
Feb 12, 2023 07:39 AM IST

Haryana Govt Bans : அரசு மருத்துவமனை ஊழியர்கள் இனி ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய முடியாது. அதிகமான ஒப்பனை, வினோதமான முடி அலங்காரத்துக்கும் அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகளை அரியானா அரசு விதித்துள்ளது. .

அரசு மருத்துவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு
அரசு மருத்துவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு

ட்ரெண்டிங் செய்திகள்

24 மணி நேரமும் இந்த விதிமுறையை கடைபிடிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளை அரியானா அரசு விதித்துள்ளது. அரசு மருத்துவமனைகள் குறித்து பொதுமக்களிடம் நன்மதிப்பை உருவாக்கும் விதமாக அரியானா அரசு கட்டுப்பாடுகளை அரியானா அரசு விதித்துள்ளது

இதுதொடர்பாக, சுகாதார அமைச்சர் அனில் விஜ் கூறியதாவது,” அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறை தயாரிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. பணியில் இருக்கும் ஊழியர்கள் 24 மணி நேரமும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். வார இறுதிகள், மாலை மற்றும் இரவுப் பணிக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது.

தவறும் ஊழியர்கள் குறிப்பிட்ட தினம் பணிக்கு வராததாக பதிவு செய்யப்படும். வினோதமான முடி அலங்காரம், அதிகமான நகை, அணிகலன்கள், ஒப்பனை அணிவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. நகங்களை ஒட்ட வெட்டி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். காலணிகளும் தூய்மையாக இருக்கவேண்டும். பெண் ஊழியர்கள் குட்டை பாவாடை, கையில்லாத மேலாடை போன்றவற்றை அணியக்கூடாது.

டெனிம், தோல் ஆடைகளுக்கு அனுமதியில்லை. ஊழியர்கள் நேர்த்தியான, சுத்தமான ஆடையில் தங்களின் பெயர், பணி குறித்த பட்டியை அணிந்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனை ஊழியர்கள் இடையே ஒழுங்கு, ஒரே தன்மை, சமத்துவம் போன்றவற்றை கொண்டு வருவதற்காகவும், அரசு மருத்துவமனைகள் குறித்து பொதுமக்களிடம் ஒரு நன்மதிப்பை உருவாக்கும் விதமாகவும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. 

பாதுகாவலர்கள், டிரைவர்கள், சமையலர்கள் உள்பட மருத்துவமனை அனைத்துப் பிரிவு ஊழியர்களும் முறையான சீருடையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு ஹரியானா சிவில் மெடிக்கல் சர்வீசஸ் அசோசியேஷன் அம்பாலா வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ”ஆடைக் கட்டுப்பாடு மருத்துவமனை ஊழியர்களுக்கு பொதுமக்களிடம் ஒரு நன்மதிப்பை கொடுக்கும். சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு குறைந்தது மூன்று ஜோடி ஆடைகளை வழங்க வேண்டும் . 

மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்களுக்கு உடை மாற்றும் அறைகள் தனித்தனியாக இருக்க வேண்டும். மேலும், ஊழியர்கள் மருத்துவமனைக்கு வரும்போது உடைகளை மாற்றிக் கொள்ளவும், பணி நேரம் முடிந்ததும் சொந்த ஆடைகளை அணிந்து கொள்ளவும் அனுமதிக்க வேண்டும்” என்றார்.

ஹிசாரில், ஹரியானாவின் பல்நோக்கு சுகாதார ஊழியர்களும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.ஆனால் செவிலியர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வினிதா கூறுகையில், ”ஆடைக் கட்டுப்பாட்டை அமல்படுத்தும் முன் சங்கத்தின் கருத்தை அரசு கேட்டிருக்க வேண்டும். நிர்வாக அதிகாரிகளுக்கும் ஆடைக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்