மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள் - ஈரானுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள் - ஈரானுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பயங்கரவாதத் தாக்குதல்கள் - ஈரானுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

Marimuthu M HT Tamil
Jan 12, 2024 01:12 PM IST

இந்திய கடற்கரையில் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்துவது குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது.

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியுடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் வணிக கப்பல்களைக் குறிவைக்க பயன்படுத்தப்பட்ட ட்ரோன், ஏவுகணை மற்றும் ரேடார் தளங்கள் உட்பட தெற்கு ஏமனில் உள்ள ஹவுதி ராணுவ நிலைகள் மீது அமெரிக்க-இங்கிலாந்து படைகள் நேற்று இரவு(ஜனவரி 11) தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரானிய அதிபர் இப்ராஹீம் ரைசியை சந்தித்தார். 

 மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் பதற்றம், உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கனுடன் நேற்றிரவு இந்திய வெளியுறவு அமைச்சகம் பேசியது. 

ஜனவரி 10ஆம் தேதி, வைப்ரண்ட் குஜராத் உச்சி மாநாட்டின்போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயாத் அல் நஹ்யானுடனான சந்திப்பின் போது, பிரதமர் நரேந்திர மோடியின் தூதுக்குழுவின் ஒரு பகுதியாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இருந்தார். சவுதி அரேபியா போன்ற நாடுகள் உட்பட மத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியா தொடர்பில் இருந்து வருகிறது.

தனது பயணத்தின்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி இடையேயான சந்தித்துள்ளார் என்றும்; அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திப்பார் என்றும் தெரிகிறது. 

 இந்திய கடற்கரையில் எம்.வி.கெம் புளூட்டோ மற்றும் ஷாஹெட் 136 போன்ற வணிகக் கப்பல்கள் மீது, ட்ரோன்களைப் பயன்படுத்தி, ஹவுதிகள் நடத்தியத் தாக்குதல்கள் குறித்து இந்தியா கவலை கொண்டிருப்பதால் இந்தப் பேச்சுவார்த்தை வெளிப்படையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காசாவில் ஹமாஸ் மீதான இஸ்ரேல் போரை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து இரு தரப்பினரும் வெளிப்படையான கருத்துக்களை எதிர்பார்க்கின்றன. அதே வேளையில், தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7அன்று ஹமாஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட படுகொலையை எந்த வகையிலும் நியாயப்படுத்தாது என்பதை இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. 

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஹவுதிகள், ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் கைதாப் ஹிஸ்புல்லா ஆகியவற்றின் பின்னணியில் தெஹ்ரான் இருப்பதால் ஈரானிய தலைமையுடனான உரையாடல் மற்றும் அவர்களின் கருத்துகள் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இப்பயணத்தில் ஈரானில் உள்ள சாபஹார் துறைமுகம் வழியாக செல்லும் வடக்கு-தெற்கு வர்த்தக நடைபாதை மற்றும் நடந்து வரும் அஜர்பைஜான்-ஆர்மீனிய மோதல் குறித்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இஸ்ரேல்- பாலஸ்தீன மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் இருநாட்டுத் தீர்வை இந்தியா ஆதரிக்கிறது. ஆனால் அரசியல் நோக்கங்களுக்காக பயங்கரவாதத்தை எதிர்க்கிறது. ஏடன் வளைகுடாவில் இருந்து சோமாலிய கடற்கொள்ளையர்களை இந்தியா எதிர்கொண்டாலும், மத்திய கிழக்கு பொருளாதார நடைபாதையில் தனது இருப்பினை சரிசெய்ய முயற்சிக்கிறது, இந்தியா. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.