Woman Arrest: விமானத்தில் ஆடைகளைக் கழற்றி வீசிய பெண்!
தனியார் விமானத்தில் ஆடைகளைக் கழற்றி வீசிவிட்டு தகராறில் ஈடுபட்ட இத்தாலி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியிலிருந்து மும்பை நோக்கி தனியார் விமானம் மற்றும் வந்துள்ளது. அந்த விமானத்தில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். எக்னாமி வகுப்பு டிக்கெட் எடுத்திருந்த அந்த பெண் பிசினஸ் வகுப்பு இருக்கைக்கு செல்ல முயற்சி செய்துள்ளார்.
அப்போது பணியில் ஈடுபட்டிருந்த விமான ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தி உரிய இடத்தில் அமரும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இத்தாலி பயணி விமான ஊழியர்களுடன் கடுமையாக தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் சண்டையின்போது ஊழியர் ஒருவரின் முகத்திலும் குத்தி இருக்கிறார். இதனால் அதிர்ச்சடைந்த விமான ஊழியர்கள் இதுகுறித்து விமான பைலட்டிடம் புகார் தெரிவித்துள்ளனர். பின்னர் அவர் அந்தப் பெண் பயணியைச் சமாதானம் செய்ய முயற்சி செய்து உள்ளார்.
எதற்கும் பிடி கொடுக்காத அந்த பெண் திடீரென தனது ஆடைகளைக் கழற்றி வீசிவிட்டு விமானத்தில் அங்கும் இங்கும் சுற்று திறந்து உள்ளார். இதனால் விமானத்தில் மற்ற பயணிகளுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
பின்னர் மும்பையில் விமானம் தரை இறங்கியதும் இதுகுறித்து விமான ஊழியர்கள் பாதுகாப்பு பிரிவு அலுவலர்களிடம் புகார் செய்துள்ளனர். இது குறித்து விசாரணை செய்த பாதுகாப்பு பிரிவினர் மும்பை காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தேவையில்லாமல் விமானத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட அந்த இத்தாலிப் பெண்ணிடம் விசாரணை செய்து பின்னர் கைது செய்தனர். அவரது பாஸ்போர்ட்டை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தால் மும்பை விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டாபிக்ஸ்