Israel-Hamas conflict: ‘பணயக்கைதிகளை ஹமாஸ் குழு விரைவில் விடுவிக்கும்’-பைடன் நம்பிக்கை
வெள்ளை மாளிகையில் நன்றி தெரிவிக்கும் விழாவின் போது, செய்தியாளர்கள் அதிபர் பைடனிடம் கேள்விகளை எழுப்பினர்.
போர் நிறுத்தத்திற்கு ஈடாக காசாவில் ஹமாஸ் பிடியில் உள்ள சில பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
வெள்ளை மாளிகையில் நன்றி தெரிவிக்கும் விழாவின் போது, செய்தியாளர்கள் அதிபர் பைடனிடம் கேள்விகளை எழுப்பினர்.
அப்போது ஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்தத்தற்கு ஒரு ஒப்பந்தம் நெருங்கிவிட்டதா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, "நான் அப்படிதான் நம்புகிறேன்," என்று பைடன் கூறினார்.
மூன்று நாள் போர்நிறுத்தத்திற்கு ஈடாக 50 பணயக்கைதிகளை அனுப்ப கத்தாரின் மத்தியஸ்தர்கள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்வதாக கடந்த வாரம் செய்தி வெளியாகியிருந்தது. காசாவில் உள்ள பொதுமக்களுக்கு அவசர உதவி உபகரணங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இந்த ஒப்பந்தம் உதவும் என்று மத்தியஸ்தர்கள் நம்பினர்.
அக்டோபர் 7 அன்று இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நடத்திய எல்லை தாண்டிய தாக்குதலின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 240 பேர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
பணயக்கைதிகளில் சுமார் 33 குழந்தைகளும் உள்ளனர். இஸ்ரேலிய தரவுகளின்படி, சுமார் 1,200 இஸ்ரேலியர்கள், பெரும்பாலும் பொதுமக்கள், ஹமாஸ் போராளிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர், இது இஸ்ரேலின் 75 ஆண்டுகால வரலாற்றில் மிகக் கொடிய தாக்குதலாக கருதப்படுகிறது. இந்த திடீர் தாக்குதல், பாலஸ்தீன பிரதேசத்தை ஆக்கிரமிக்க இஸ்ரேலை தூண்டியது.
இஸ்ரேல் பதிலடி தாக்குதலில், 5,500 குழந்தைகள் உட்பட குறைந்தது 13,000 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய இராணுவத்தின் இடைவிடாத குண்டுவீச்சினால் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
"அனைத்து குழந்தைகளும் கடுமையான நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடுகின்றன மற்றும் தொடர்ந்து சுகாதார பராமரிப்பு தேவைப்படுகின்றன," என்று WHO கூறியது.
காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் கீழே உள்ள பரந்த சுரங்கப்பாதையை ராணுவ நோக்கங்களுக்காக ஹமாஸ் பயன்படுத்தியதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் ஒரு சுரங்கப்பாதையை கண்டுபிடித்ததாகக் கூறியிருக்கிறது இஸ்ரேல். ஆனால் தரைக்குக் கீழே ஒரு பெரிய ராணுவ தலைமையகம் இருப்பதற்கான ஆதாரங்களை இன்னும் இஸ்ரேல் வெளியிடவில்லை.
முன்னதாக, மருத்துவமனைக்கு இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் குழுவினர் பிடித்துச் சென்றதாக வீடியோ ஒன்றை இஸ்ரேல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்