Fact Check: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் வீடியோ உண்மையா?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Fact Check: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் வீடியோ உண்மையா?

Newschecker HT Tamil
Jul 23, 2024 05:51 PM IST

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் நியூஸ்செக்கர் தமிழ் ஈடுபட்டது.

Fact Check: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check: பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் வீடியோ உண்மையா?

உண்மை: வைரலாகும் வீடியோ நிகழ்வு கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றதாகும்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

” நேற்று … மோடிக்கு வாரணாசியில் செருப்படி இன்று… பல்டி பாபு நித்திஷ் குமாருக்கு கன்னத்தில் ஒரு அறை விழுந்து விட்டது மாற்றம் வேகமாதான் நடக்குது” என்று இந்த வீடியோ பரவி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் வைரல்

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் வீடியோ குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.

வைரலாகும் வீடியோவைக் கீ-ப்ரேம்களாகப் பிரித்து ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கியபோது அந்த நிகழ்வு தற்போதையது அல்ல; கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றது என்பதை நம்மால் அறிய முடிந்தது.

கடந்த மார்ச் 2022ல் ஊடகங்களில் வெளியான செய்தியின்படி பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பீகார் மாநிலம், பக்தியார்பூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது அவரை இளைஞர் ஒருவர் தாக்கியதாக செய்தி இடம்பெற்றிருந்தது.

2022 இல் நடைபெற்ற நிகழ்வு

குறிப்பிட்ட வீடியோவே தற்போது நடைபெற்ற நிகழ்வு என்பதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு விழுந்த அறை என்று பரவும் வீடியோ கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வு என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொறுப்புத் துறப்பு

இந்தச் செய்தி முதலில் நியூஸ் செக்கர் தமிழில் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

நிதிஷ் குமார் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் பீகாரின் 22வது முதலமைச்சராக 22 பிப்ரவரி 2015 முதல் பணியாற்றி வருகிறார், இதற்கு முன்பு 2005 முதல் 2014 வரை மற்றும் 2000 இல் குறுகிய காலத்திற்கு பதவி வகித்தவர். 9வது முறையாக முதல்வர் பதவியை வகித்து வருகிறார்.

அவர் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் ஆவார். முன்னதாக, குமார் சமதா கட்சி உறுப்பினராக மத்திய அமைச்சராகவும் பணியாற்றினார். அவர் 2005 வரை சமதா கட்சியிலும், 1989 முதல் 1994 வரை ஜனதா தளத்திலும் உறுப்பினராக இருந்தார். குமார் முதலில் ஜனதா தளத்தின் உறுப்பினராக அரசியலில் நுழைந்தார், 1985 இல் எம்எல்ஏ ஆனார். ஒரு சோசலிஸ்ட், குமார் 1994 இல் ஜார்ஜ் பெர்னாண்டஸுடன் இணைந்து சமதா கட்சியை நிறுவினார். 1996 இல் அவர் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கத்தில் மத்திய அமைச்சராகப் பணியாற்றினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.