தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Is That Enough, Grandpa? Kannakattuhe While Listening - 12 Wives! 102 Children!

போதுமா தாத்தா? கேட்கும் போதே கண்ண கட்டுதே - 12 மனைவிகள்! 102 குழந்தைகள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 03, 2023 07:08 PM IST

அட அது கூட பராவா இல்லை. வயது ஆக ஆக எனக்கு எனது மனைவிகளின் பெயரே மறந்து விடுகிறது.

 மூசா ஹசம்யா கசேரா (குடும்பம்)
மூசா ஹசம்யா கசேரா (குடும்பம்)

ட்ரெண்டிங் செய்திகள்

கிழக்கு உகாண்டாவின் புடலேஜா மாவட்டத்தில் உள்ள புகிசா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார் 68 வயது நிரம்பிய மூசா ஹசம்யா கசேரா. இவர்தான் அந்த கிராமத்திலேயே பெரிய குடும்பம். இந்நிலையில் மூசா ஹசம்யா கசேராவை ஆங்கில ஊடகம் ஒன்று சமீபத்தில் பேட்டி எடுத்தது. அதில் நான் பிறந்த குடும்பம் மிகவும் சிறியது. எனக்கு சில சகோதரர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் எனக்கு பெரிய குடும்பம் என்றால் மிகவும் பிடிக்கும். அது குறித்து எனது குடும்பத்தினரிடம் சொன்னபோது என்னை நிறைய திருமணங்கள் செய்ய சொன்னார்கள்.நான் இளமையில் கறி கடை ஒன்றில் பணியாற்றினேன். அப்போது எனக்கு பெண் பார்க்க தொடங்கினார்கள். 17 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். முதல் மனைவிக்கு சில குழந்தைகள் பிறந்தன. ஆனால் எனக்கு என்னவோ குடும்பம் மிக சின்னதாக தெரிந்தது. இதனால் இன்னொரு திருமணம் செய்து கொண்டேன். இப்படியே தொடர்ச்சியாக 12 திருமணங்கள் வரை செய்து கொண்டே இப்போது எனக்கு வயது 68 ஆகிறது. எனக்கு 12 மனைவிகளுக்கு 102 குழந்தைககளும் உள்ளனர். 578 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். இப்போது நான் எதிர்பார்த்ததை போல என்குடும்பம் மிகவும் பெரியதானது. ஆனால் இனி நான் குழந்தைகளை பெற்றுக் கொள்ளப் போவதில்லை. காரணம் நான் இளமையாகவும் துடிப்பாகவும் இந்த போது எனக்கு நல்ல வருமானம் கிடைத்தது. ஆனால் குடும்பம் பெரிதாக ஆக அதற்கு தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை. இதனால் நாங்கள் அனைவரும் ஒரு சிறிய வீட்டில் வசிக்க வேண்டியதாயிற்று. மேலும் போதிய உணவு கூட இல்லை. நான் ஒரு சாதாரண ஏழை தான் வெறும் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. எனவே என் குழந்தைகளை சரியானபடிக்க வைக்க போதிய பணம் இல்லை. இந்நிலையில் நான் இனி குழந்தை பெற்றுக்கொள்ள போவதில்லை. எனது மனைவிகள் கருத்தடை செய்து கொண்டனர். ஆனால் நான் இனி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்க வறுமை மட்டும் காரணம் இல்லை. இப்போது எனக்கு 10 -15 வயதில் பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்களின் பெயரை என்னால் நியாபகம் வைத்துக்கொள்ள முடிய வில்லை. அட அது கூட பராவா இல்லை. வயது ஆக ஆக எனக்கு எனது மனைவிகளின் பெயரே மறந்து விடுகிறது. என் கடைசி மகனின் வயது 35 அதேபோல என் கடைசி மனைவியின் வயதும் 35தான் என்கிறார்.

இவ்வளவு பெரிய குடும்பத்தில் வரும் சண்டைகளை தவிர்க்க மாதம் ஒரு முறை கூடுவோம். அதில் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தீர்வு காண முயல்வோம் என்கிறார். இப்போது டூரிஸ்ட் கைடாக வேலைபார்த்து வரும் ஹசம்யாவிற்கு நிரந்தர வருமானம் கிடையாது.

இந்நிலையில் ஹசம்யாவின் 12 மனைவிகளில் சிலர் பிரிந்து சென்று விட்டனர். இரண்டு மனைவிகள் அருகில் உள்ள நகர் பகுதியில் வசிக்கின்றனர் . ஒரு மனைவி பக்கத்து கிராமத்தில் வசித்து வருகிறார். ஆனால் பலர் என்னுடன் தான் இருக்கின்றனர். காரணம் இங்கு மகிழ்ச்சி இருக்கிறது. எனவே தான் அவர்கள் இங்கேயே இருக்கிறார்கள் என்று கூறி உள்ளார்.

ஹசம்யாவின் குடும்பம் குறித்து பேசிய உள்ளூர் தலைவர், " என்னதான் ஹசஹ்யாவின் குடும்பத்தில் 102 குழந்தைகள் இருந்தாலும் சிறப்பாக வளர்த்திருக்கிறார் ஹசம்யா. அவர்கள் யார் மீதும் இதுவரை திருட்டு பழியோ, சண்டை, சச்சரவோ பழியோ இருந்தது கிடையாது" என்று கூறி உள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்