International Whale Shark Day: உலகின் மிகப்பெரிய மீன்..! மனிதர்களுக்கு அச்சுறுத்தல் இல்லாத சுறா திமிங்கல நாள் பின்னணி
International Whale Shark Day 2024: உலகின் மிகப்பெரிய மீன், 12 டன் எடை மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத விலங்கு என இருந்து வரும் தமிங்கல சுறா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக
உலகின் மிகப்பெரிய மீனாக இருந்து வரும் திமிங்கல சுறாக்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக உலக சுறா திமிங்கலம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30 சர்வதேச திமிங்கல சுறா தினம் கொண்டாடப்படுகிறது.
திமிங்கல சுறாக்கள் வடிகட்டி மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத விலங்குகளில் ஒன்றாக உள்ளது. அவை அதிகப்படியான மீன்பிடித்தல், வாழ்விட இழப்பு மற்றும் படகு தாக்குதல்களால் பாதிக்கப்படக்கூடிய விலங்கினமாகவும் உள்ளது.
சர்வதேச திமிங்கல சுறா தின வரலாறு
சர்வதேச திமிங்கல சுறா தினம் முதன்முதலில் 2008இல் இஸ்லா ஹோல்பாக்ஸில் நடந்த சர்வதேச திமிங்கல சுறா மாநாட்டில் நினைவுகூரப்பட்டது. இந்த மாநாட்டில் 40 கடல் வல்லுநர்கள், ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் திமிங்கல சுறாக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைப் பற்றி பேசியதோடு தங்களது கவலையையும் வெளிப்படுத்தினர்.
சுறாக்கள் இருப்பு 240 முதல் 260 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேல் இருப்பதாகக் கூறப்பட்டாலும், 1820களில் தான் தென்னாப்பிரிக்காவின் கடற்கரையில் முதன்முதலில் திமிங்கல சுறா கண்டுபிடிக்கப்பட்டது.
டாக்டர் ஆண்ட்ரூ ஸ்மித், பூமியில் இருக்கும் மிகப்பெரிய சுறா மீனை சரியாக விவரித்தார். அவற்றின் அளவு மகத்தானதாக இருந்தபோதிலும், திமிங்கல சுறாக்கள் மென்மையான நடத்தை கொண்டவை என்று அறியப்படுகிறது.
பிறக்கும்போது, அவை 16 முதல் 24 அங்குலங்களுக்கு மேல் இருக்காது. ஆனால் அவை தொடர்ந்து வளர்ந்து உச்சத்தை எட்டும்போது, அவை 46 முதல் 60 அடி வரை நீளமாக இருக்கும். அவை 300 வரிசைகளில் 3 ஆயிரம் பற்களைக் கொண்டுள்ளன. பற்களின் நீளம் 0.2 அங்குலம் மட்டுமே.
சுமார் 12 டன் எடையுள்ள, திமிங்கல சுறாக்கள் வடிகட்டி-ஊட்டிகள், பெரும்பாலும் பிளாங்க்டன்கள், ஸ்க்விட்கள் மற்றும் மீன்களை உட்கொள்ளும். அவற்றின் அளவைப் போலவே, ஒவ்வொரு நாளும் 44 பவுண்டுகள் உணவை உண்ணும் அளவுக்கு அதிகமான பசியைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
சர்வதேச திமிங்கல சுறா தினம் 2024: முக்கியத்துவம்
இந்த நாளின் முக்கியத்துவமாக உலகின் மிகப்பெரிய மீன் அவல நிலையை பற்றிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அவற்றின் இருப்பை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி அவசியத்தை கற்பித்தலாக உள்ளது.
அத்துடன் திமிங்கல சுறாக்கள் மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புக்கு அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி மேலும் அறிய மக்களை ஊக்குவிக்கிறது.
சுறா துடுப்புகள் மற்றும் பிற சுறா பொருள்களின் நுகர்வுகளை குறைத்தல், திமிங்கல சுறாக்களை பாதுகாக்க வேலை செய்யும் அமைப்புகளை ஆதரித்தல் மற்றும் திமிங்கல சுறாக்கள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு குறித்து தங்களுக்கும் மற்றவர்களுக்கும் கல்வி கற்பது போன்ற திமிங்கல சுறாக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் மக்களை ஊக்குவிக்கிறது. சுறாக்களின் பாதுகாப்பு முயற்சிகளின் மூலம் வருவாய் ஈட்ட உதவுகிறது.
சில திமிங்கல சுறாக்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த உயிரினம் மட்டும் காணாமல் போனால் நீண்ட காலம் பிளாங்க்டன் அளவுகளை கட்டுப்படுத்து தன்மையை கடல் இழக்கும் என கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்