International Sex Workers Day 2024: சர்வதேச செக்ஸ் தொழிலாளர்களுக்கான நாள், வரலாறு மற்றும் தெரிந்து கொள்ள வேண்டியவை
International Sex Workers Day 2024: சர்வதேச செக்ஸ் தொழிலாளர்களுக்கான நாள், வரலாறு மற்றும் அவை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை பற்றி நாம் அறிந்துகொள்வோம்.
சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினம் 2024: பாலியல் தொழிலாளர்கள், பொதுவாக ‘செக்ஸ் தொழிலாளர்கள்’ என பொதுசமூகத்தில் அழைக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் கடினமான சூழ்நிலைகளில் வேலை செய்கிறார்கள்.
அவர்கள் பல்வேறு காலச்சூழ்நிலையில் சுரண்டப்படுகிறார்கள் மற்றும் சிக்கலான சுகாதார நிலைமைகளுடன் வாழ வைக்கப்படுகிறார்கள். உலகில் பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ’சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினம்’ ஜூன் 2ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
பாலியல் தொழிலாளர்கள் பெரும்பாலும் பல்வேறு வகையான மக்களால் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக தினமும் பணிக்குச் செல்லும் நெடுஞ்சாலை கனரக வாகன ஓட்டுநர்கள், கடினமான பணி செய்பவர்கள் தொடங்கி கல்லூரி மாணவர்கள் வரை, பல்வேறு விதமான நபர்கள் மூலம் பாலியல் சுரண்டலுக்கு ஆட்படுகின்றார்கள்.
இந்தப் போக்கு கடுமையான சவால்களுக்கு வழிவகுக்கும். பெரும்பாலும் அவர்களுக்கு ஆபத்தானது. பாலியல் தொழிலாளர்களுக்கு ஆரோக்கியமான வேலை நிலைமைகளின் முக்கியத்துவத்தையும், அவர்கள் மதிக்கப்படுவதை உறுதி செய்ய நாம் எவ்வாறு ஒன்றிணைய முடியும் என்பதை இந்த நாள் மீண்டும் வலியுறுத்துகிறது. இந்த சிறப்பு நாளைக் கடைப்பிடிக்க நாம் தயாராகி வரும் நிலையில், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இங்கே..
சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 2 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினம் ஞாயிற்றுக்கிழமையில் வருகிறது.
சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தின வரலாறு:
1975ஆம் ஆண்டில், ஜூன் 2அன்று, சுமார் 100 செக்ஸ் தொழிலாளர்கள் பிரான்ஸின் லியோனில் உள்ள செயிண்ட்-நிசியர் தேவாலயத்தில் கூடி, சுரண்டல் வேலை மற்றும் செக்ஸ் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்த உரையாடலைத் தொடங்கினர். அவர்கள் தங்கள் குறைகளை வெளிப்படுத்த ஒரு ஊடக பரப்புரையினையும் தொடங்கினர்.
இது சிறிதுநாட்களில் தேசிய மற்றும் சர்வதேச உரையாடல்களுக்கு வழிவகுத்தது. பாலியல் தொழிலாளர்கள் எட்டு நாள்கள் நீண்ட வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். அதில் அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக, அவர்கள் அங்கு பணிபுரிந்த ஹோட்டல்களை மீண்டும் திறப்பது, செக்ஸ் தொழிலாளர்கள் மீதான போலீஸாரின் மிருகத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவரக் கோருதல் மற்றும் பல பாலியல் தொழிலாளர்களின் கொலைகள் குறித்து உரிய விசாரணையை வலியுறுத்துவது உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
போலீசார் கோரிக்கைகளுக்கு இணங்கவில்லை என்றாலும், எட்டு நாட்களுக்குப் பிறகு எந்தச் சட்ட சீர்திருத்தமும் இல்லாமல் தேவாலயம் செக்ஸ் தொழிலாளர்களால் அகற்றப்பட்டது. இந்தச் சம்பவம் ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலும் பல இயக்கங்களை பற்றவைத்தது.
சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினத்தின் முக்கியத்துவம்:
பாலியல் தொழிலாளர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளுக்குத் தகுதியானவர்கள் தான். அவர்கள் பெரும்பாலும் தங்கள் தொழிலில் சுரண்டப்படுகிறார்கள். அவர்களுக்கு சில உணர்வுகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் அனைத்து காலகட்டத்திலும், அனைத்து ஊர்களிலும் உள்ளது. அவர்கள் தங்க வாடகைக்கு வீடு கிடைப்பதில் தொடங்கி, பாலியல் தொழிலாளர்கள் என்றாலே மோசமான மனிதர்கள் என்ற கட்டமைப்பு இருக்கிறது.
பாலியல் தொழிலாளர்களும் பல நோய்களுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினம் உலகெங்கிலும் உள்ள பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குகிறது மற்றும் அவர்களுக்கு நாம் உதவ எவ்வாறு ஒன்றிணையலாம் என்பது குறித்த உரையாடல்களைத் தொடங்குகிறது.
டாபிக்ஸ்