International Corgi Day: 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாய் இனம்! சிறிய கால்களுடன் இருக்கும் கோர்கி நாய்கள் தினம் இன்று-international corgi day 2024 know about history of corgi and its facts - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  International Corgi Day: 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாய் இனம்! சிறிய கால்களுடன் இருக்கும் கோர்கி நாய்கள் தினம் இன்று

International Corgi Day: 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாய் இனம்! சிறிய கால்களுடன் இருக்கும் கோர்கி நாய்கள் தினம் இன்று

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 04, 2024 10:36 AM IST

சிறிய கால்களுடன் தனித்துவமான நாய் இனமாக இருந்து வரும் கோர்கி, 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாய் இனமாக இருந்து வருகிறது. இதன் தனித்துவத்தை கொண்டாடும் விதமாக சர்வதேச கோர்கி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

சிறிய கால்களுடன் இருக்கும் கோர்கி நாய்கள் தினம் இன்று
சிறிய கால்களுடன் இருக்கும் கோர்கி நாய்கள் தினம் இன்று

இந்த நாய் இனத்தின் தனித்துவமான தோற்றம், நட்பாக பழகும் இயல்பு, உரிமையாளரிடம் காட்டும் விஸ்வாசம், புத்தி கூர்மை போன்ற விஷயங்களை கொண்டாடும் விதமாக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. அழிந்த வரும் நாய் இனமாக இருக்கும் கோர்கி தற்போது 300 அளவிலான எண்ணிக்கையில் இருப்பதாக கூறப்படுகிறது. 

கோர்கி நாய் இனத்தின் வரலாறு

கோர்கியின் வரலாற்றை 12ஆம் நூற்றாண்டில் இருந்து தொடங்குகிறது. ஃப்ளெமிஷ் நெசவாளர்கள் வேல்ஸ் பகுதிக்கு குடிபெயர்ந்தபோது தொடங்கியுள்ளது. பெம்ப்ரோக் வெல்ஷ் கோர்கி இனம் நாய்கள் நெசவாளர்களுடன் மிகவும் தொடர்புடையதாக உள்ளது. ஏனென்றால் கோர்கி இனத்தின் மக்கள்தொகையை அதிகரிக்க காரணமாக இந்த நெசவாளர்கள் இருந்துள்ளார்.

அதேபோல் வடக்கு ஐரோப்பா பகுதியில் இருந்து வந்த வணிகர்கள், விவசாயிகள் மற்றும் கடலோடிகள் போன்ற குடியேறிகளுக்கும் கோர்கி இன நாய் பரவலுக்கும் தொடர்பு உள்ளது. உலகில் வாழ்ந்து வரும் மிகவும் பழமையான நாட்டு இன நாய்களில் ஒன்றாக இவை இருந்து வருகின்றன

சிறிய நாய்களை விரும்புபவர்கள் கோர்கி நாய் இனத்தை தங்களது அபிமானதாக கருதுகிறார்கள். இந்த இனத்தை எவ்வாறு பராமரிப்பது என்பதை அறிய சர்வதேச கோர்கி தினம் வாய்ப்பை உருவாக்குகிறது.

2019ஆம் ஆண்டு முதல் சர்வதேச கோர்கி தினம் கொண்டாட்ட நாளாக இருந்து வருகிறது. பின்னர் இந்த நிகழ்வை மேலும் மேம்படுத்துவதற்காக ஒமாஹா கோர்கி குழு ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கோர்கி இன மீட்புத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதுடன், கோர்கி இன நாய் நாய் குறித்து உலகம் முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் நாளாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த அற்புதமான நாளின் நினைவாக, ஒமாஹா கோர்கி குழுவினர் நாய் பூங்காக்களில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து, கோர்கிஸின் உரிமையாளர்கள் தங்கள் தோழர்களுடன் பழகவும் வேடிக்கை பார்க்கவும் அனுமதி அளிக்கப்படுகிறார்கள்.

கோர்கி தினம் கொண்டாடுவது எப்படி?

கைவிடப்படும் கோர்கி நாய் இனங்களை கண்டறிந்து அவற்றுக்கு தேவையான வசதிகளை, ஊட்டச்சத்து உணவுகள் வழங்குதல் இந்த நாளில் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

உள்ளூர் கோர்கி குழுக்களால் ஏற்பாடு செய்யப்படும் நிதி திரட்டும் இயக்கங்கள் உதவியுடன் இந்த இனத்தை ஆதரிப்பதற்கும் கைவிடப்பட்ட கோர்கிகளுக்கான வீடுகளைக் கண்டறிய உதவும் ஒரு சிறந்த வழியாக உள்ளது.

பழம்பெரும் நாய் இனங்களில் ஒன்றாகவும், மிகவும் க்யூட்டாகவும் இருந்து வரும் இந்த கோர்கி நாய்களுக்கான இந்த நாளில் அவற்றின் பாதுகாப்பு, நலன் சார்ந்த விஷயங்களில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

கோர்கி இன நாய்களின் தனித்துவ விஷயங்கள்

சிறந்த வாசனை உணர்வு

மனிதர்களுக்கு ஏற்படும் மருத்துவ பிரச்னைகளை வாசனையின் மூலம் கண்டறிய இந்த நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் அவர்களின் ரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க முடியும்.

சிறுத்தைகளுக்கு இணையான வேகம்  

கோர்கி இனத்தை சேர்ந்த கிரேஹவுண்ட் நாய்,  மணிக்கு 45 மைல் வேகத்தில் ஓடுவதாக உள்ளது. சிறுத்தை மணிக்கு 70 மைல் வேகத்தை எட்டும். ஆனால் அவை அதை 30 விநாடிகள் மட்டுமே பராமரிக்கும்.

உறுப்புகளுக்கு சுய பாதுகாப்பு 

பல கோர்கி நாய்கள் தங்கள் உறுப்புகளைபாதுகாக்க தூங்கும்போது சுருண்டுவிடுகிறது. காடுகளில் வாழும் தங்கள் முன்னோர்களிடமிருந்து எஞ்சிய உள்ளுணர்வாக இது உள்ளது.

ரத்த அழுத்தத்துக்கு நன்மை

ஒரு கோர்கி இன நாயை வளர்த்து, அதற்கு அன்பைக் கொடுப்பதன் மூலம் உங்கள் ரத்த அழுத்தம் வெகுவாக குறையும் என கூறப்படுகிறது

தனித்துவமான மூக்குகள்

கோர்கி இன நாய்களுக்கும் ஒரே மாதிரியான மூக்கு ரேகைகள் இருக்காது. ஏனெனில் இவை ஒவ்வொன்றும் கைரேகைகளை போலவே தனித்துவமானது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.