Union Budget 2024: தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக ரூ.1 டிரில்லியன் நிதி ஒதுக்கீடு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஆழமான தொழில்நுட்ப தொழில்நுட்பங்களை வலுப்படுத்த புதிய திட்டம் அறிவிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன், இன்று(பிப்ரவரி 1) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது நிதியமைச்சராக அவரது ஆறாவது பட்ஜெட்டாகவும், பிரமர் மோடி அரசாங்கத்தின் இரண்டாவது பதவிக்காலத்தில் கடைசி பட்ஜெட்டாகவும் திகழ்கிறது. இந்த பட்ஜெட்டை வெளியிடுவதற்கு முன்பு நிர்மலா சீதாராமன், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்கும் பாரம்பரிய மரபு இருக்கிறது. அதன்படி, நாடாளுமன்றம் செல்வதற்கு முன்பு அவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவை இன்று சந்தித்தார்.
அதன்பின் சரியாக 11 மணிக்கு, இடைக்கால பட்ஜெட்டை வாசிக்கத்தொடங்கினார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அதாவது, ‘’மரித்துப்போன உயிர்களின் உடலை ஆராய, தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கப்படும். பாதுகாப்பு நோக்கங்களுக்காக ஆழமான தொழில்நுட்பங்களை வலுப்படுத்த ஆத்ம நிர்பார்தாவுக்கான புதிய திட்டம் அறிவிக்கப்படும்.
புதுமைகளை வளர்ச்சியின் அடித்தளம். தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ரூ.1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும். அந்த நிதியம், நீண்ட கால தவணைக்காலங்கள் மற்றும் குறைந்த அல்லது பூஜ்ஜிய வட்டி விகிதங்களுடன் நீண்ட கால நிதி அல்லது மறு நிதியளிப்பை வழங்கும். இது சூரிய ஆற்றல் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை கணிசமாக அளவிட தனியார் துறையை ஊக்குவிக்கும்.
டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு நன்றாகவுள்ளது. பிரதமர் ஜன் தன் கணக்குகளுக்கு நேரடி நன்மை பரிமாற்றத்தின் மூலம், பயனாளிகளுக்கு ரூ .34 லட்சம் கோடியை அரசாங்கம் வழங்கியுள்ளது. மின் கசிவுகளை அடைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ.2.75 லட்சம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளது.
திறன் இந்தியா இயக்கம் 14 மில்லியன் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. 5.4 மில்லியன் இளைஞர்களுக்கு மறுதிறன் மற்றும் திறன் மேம்பாடு செய்துள்ளது.
மின்னணு தேசிய வேளாண் சந்தையில் (eNAM) 1,361 மண்டிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது 18 மில்லியன் விவசாயிகளுக்கு சேவைகளை வழங்கியுள்ளது. மின்னணு தேசிய வேளாண் சந்தை ரூ.3 லட்சம் கோடியாக வர்த்தகமாகி வருகிறது.
இந்தியாவின் சமீபத்திய செஸ் சென்ஷேஷனான வீரர் பிரக்னாநந்தா, உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு கடும் போட்டியை வழங்குகிறார்.
2010-ல் 20 செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் இருந்த நிலையில், தற்போது 80 செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் இந்தியாவில் இருக்கின்றனர். நமது இளைஞர்கள் விளையாட்டில் புதிய உயரங்களை எட்டியதை எண்ணி நாடு பெருமை கொள்கிறது. 2023-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய பாரா விளையாட்டுகளில் இதுவரை இல்லாத அதிகபட்ச பதக்கங்கள் இந்திய இளைஞர்கள் பெற்றது புதிய நம்பிக்கையைத் தருகிறது’’ என்றார்.
ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா 2023-ல் இந்தியாவின் நம்பர் 1 வீரராக ஆனார். கடந்த ஆண்டு, பிரக்ஞானந்தா 2023 செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் நார்வேயின் உலகின் நம்பர்.1 மற்றும் ஐந்து முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனிடம் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9