தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Instagram Bug Bounty: India Student Gets Whooping Rs. 38 Lakh As Reward

Instagram bug bounty:இன்ஸ்டாவில் இருந்த தவறை கண்டறிந்தவருக்கு ரூ.38 லட்சம் பரிசு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 22, 2022 12:07 AM IST

இன்ஸ்டாவில் ரீல்களை உருவாக்கும் நபருக்கும் தெரியாமலேயே அவரது தம்ப்நெயில் இமேஜை மாற்றும் விதமாக அமைந்திருந்த மிகப் பெரிய பக்-ஐ கண்டறிந்த இந்திய மாணவருக்கு வெகுமதியாக ரூ. 38 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாவில் இருந்த மிகப் பெரிய பக்-ஐ கண்டறிந்த இந்திய மாணவர்
இன்ஸ்டாவில் இருந்த மிகப் பெரிய பக்-ஐ கண்டறிந்த இந்திய மாணவர்

ட்ரெண்டிங் செய்திகள்

இதையடுத்து இன்ஸ்டா பயனாளர் உருவாக்கும் ரீல்களில் அவரது அனுமதி இல்லாமல் யாராலும் தம்ப்நெயில் மாற்றி வைக்க முடியும் என மிகப் பெரிய பக் இருப்பதை ஜெய்ப்பூரைச் சேர்ந்த நீரஜ் ஷர்மா என்ற மாணவர் கண்டறிந்துள்ளார்.

அதாவது லாக்இன் டிடெயில் மற்றும் பாஸ்வேர்டு ஏதும் இல்லாமல் எந்தவொரு பயனாளரின் கணக்கிலும் தம்ப்நெயில் உருவங்களை மாற்றி கொள்ள முடியும் என்பதை கண்டறிந்த அவர் இந்த பக் குறித்து இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்குக்கு தெரிவித்துள்ளார். இதை ஆய்வு செய்து அந்த தவறு உண்மையானதாக ஒப்புக்கொண்ட நிறுவனம் நீரஜ் ஷர்மாவின் பணிக்காக ரூ.38 லட்சம் வெகுமதி வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக நீரஜ் ஷர்மா கூறும்போது, "இன்ஸ்டாகிராமில் ஒரு பக் இருந்தது. இந்த பக் மூலம் இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் ரீல்களின் தம்ப்நெயிலை எந்த கணக்கிலிருந்தும் மாற்றலாம். கணக்கு வைத்திருப்பவரின் பாஸ்வேர்டு எவ்வளவு வலிமையாக இருந்தாலும் அதை மாற்ற கணக்கின் மீடியா ஐடி மட்டுமே தேவை.

கடந்த ஆண்டு டிசம்பரில், எனது இன்ஸ்டாகிராம் கணக்கில் நிகழும் தவறுகளைக் கண்டறிய ஆரம்பித்தேன். பின்னர் இதுபற்றி நீண்ட கால கடின உழைப்புக்குப் பிறகு, ஜனவரி 31ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் பக் இருப்பதை அறிந்தேன். இதன் பின் இந்த தவறு குறித்து அறிக்கையும் அனுப்பினேன், மூன்று நாள்களுக்குப் பிறகு அவர்களிடமிருந்து பதில் கிடைத்தது. இது குறித்த ஒரு டெமோவைப் பகிரும்படி என்னிடம் கேட்டனர்" என்றார்.

அதில், ஷர்மா 5 நிமிடங்களில் மற்றொரு நபருடைய ரீல் தம்ப்நெயிலை மாற்றிக் காட்டினார். இதனால் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தினர் அவரது அறிக்கையை ஏற்றுக்கொண்டு அமெரிக்கா டாலர் $ 45,000 (இந்திய மதிப்பில் ரூ. 35 லட்சம்) வெகுமதி அளித்தனர். இந்த வெகுமதி வழங்குவதில் நான்கு மாதங்கள் தாமதம் ஆனதால் போனஸாக $ 4500 டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சம்) வழங்கினர்.

நீரஜ் ஷர்மாவின் இந்த இன்ஸ்டா பக் கண்டுபிடிப்பால் ஏராளமானோரின் இன்ஸ்டா கணக்குகள் ஹேக் செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளது. 

WhatsApp channel