தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Indore Temple 13 Dead In Indore Temple Stepwell Collapse Rescue Ops Underway

Indore Temple: இந்தூரில் கோயில் படிக்கிணறு இடிந்து விழுந்து விபத்து-13 பேர் பலி

Manigandan K T HT Tamil
Mar 30, 2023 06:16 PM IST

Indore: படிக்கட்டு கிணற்றின் தடுப்பு சுவர் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

விபத்து நிகழ்ந்த இடம்
விபத்து நிகழ்ந்த இடம்

ட்ரெண்டிங் செய்திகள்

ஸ்ரீபலேஷ்வர் மகாதேவ் ஜூலேலால் கோயிலில் பழமையான படிக்கிணறு உள்ளது. இங்கு ராமநவமியையொட்டி இன்று (மார்ச் 30) ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அப்போது, படிக்கட்டு கிணற்றின் தடுப்பு சுவர் பாரம் தாங்காமல் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 30க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர். 13 பேர் உயிரிழந்துவிட்டனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றனர்.

ராம நவமியின் போது பிரார்த்தனை செய்ய ஏராளமான மக்கள் கோவிலில் கூடியிருந்தபோது, ​​​​மதியம் 12 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. சில பக்தர்கள் 'யாகம்' செய்து கொண்டிருந்த போது, ​​பலர் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

இடிந்து விழுந்த கிணறு குறைந்தது 50-60 அடி ஆழம் கொண்டதாகும். தண்ணீர் நிறைந்து இருந்தது. கிணறு அமைந்துள்ள இடம் குறுகியதாக இருப்பதால், மீட்பு பணியின் போது இடையூறு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

25 பேர் விழுந்திருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்தூர் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு நிலைமையை கவனித்து வருவதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

கிணற்றில் சிக்கியவர்களை கயிறுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகானிடம் பேசியதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“இந்தூரில் நடந்த விபத்தால் மிகவும் வேதனை அடைந்தேன். முதல்வர் சவுகானிடம் பேசி, நிலைமையை கேட்டறிந்தேன். மாநில அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்