Indonesia Marriage: சமூக வலைத்தளத்தில் பூத்த காதல்! சி திருமணமான 12 நாளில் மனைவி ஆண் என்பதை கண்டறிந்த கணவர் அதிர்ச்சி
திருமணத்துக்குப் பிறகும், பாதிக்கப்பட்ட ஏகே என்பவரின் மனைவி தொடர்ந்து தனது முகத்தை அவரிடமிருந்து மறைத்து, அவரது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பழக மறுத்தபோது சந்தேகம் வலுத்தது. திருமணமான 12 நாளில் மனைவி ஆண் என்பதை கணவர் கண்டறிந்துள்ளார். திருமணத்துக்கு முன் சமூக வலைத்தளத்தில் அறிமுகமாகியுள்ளனர்.

இந்தோனேசியாவில் புதிதாக திருமணம் ஆன நபர், தனது மனைவி பெண் அல்ல என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளது. அதிர்ச்சியைப் பெற்றார். ஏ.கே என்ற 26 வயதான நபர், அடிண்டா கன்சா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாக 12 நாள்களுக்குப் பிறகு, அவர் ஒரு பெண் வேடமிட்ட ஒரு ஆண் என்பதைக் கண்டுபிடித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பூத்த காதல்
இதுதொடர்பாக தென் சீனாவில் வெளியான அறிக்கையின்படி, " கடந்த 2023இல் ஏகே முதன்முதலில் சமூக வலைத்தளத்தின் மூலம் கன்சாவுடன் தொடர்பு கொண்டார். பின்னர் இருவரும் நேரிலும் சந்தித்துள்ளனர். கன்சா எப்போதும் பாரம்பரிய முஸ்லீம் உடையை அணிந்திருந்தார், அவர்கள் சந்திக்கும் போதெல்லாம் அவரது முழு முகத்தையும் மறைத்திருந்ததாக கூறப்படுகிறது.
கன்சா நிகாப் அணிந்தது சந்தேகத்தை எழுப்பவில்லை, ஏனெனில் இது இஸ்லாத்தின் மீதான அவரது பக்தியின் பிரதிபலிப்பு என்று ஏ.கே. கருதியுள்ளார்.
பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தனக்கு குடும்பம் உறுப்பினர் யாரும் இல்லை என்று கன்சா ஏ.கே.யிடம் கூறியதாக கூறப்பட்ட நிலையில், இவர்களின் திருமணம் அரங்கேறியுள்ளது.
திருமணத்துக்கு பின் வலுத்த சந்தேகம்
திருமணத்துக்கு பிறகும், கன்சா தொடர்ந்து தனது முகத்தை அவரிடமிருந்து மறைத்து, கணவரின் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பழக மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏ.கே.வுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
முன்னதாக, மாதவிலக்கு சுழற்சி முதல் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது வரை பல காரணங்களைக் கூறி, கன்சா நெருக்கத்தை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் ஏ.கே. சந்தேகம் அதிகரித்ததால், திருமணமான 12 நாள்களுக்கு பிறகு, தனது மனைவியைப் பற்றி விசாரிக்க முடிவு செய்தார். கன்சாவின் பெற்றோர் இன்னும் உயிருடன் இருப்பதை அவர் அறிந்த கொண்டார்.
அப்போது அவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, கன்சாவின் பெற்றோர் அவருடன் திருமணம் செய்து கொண்டது பற்றி அறிந்திருக்கவில்லை. கன்சா உண்மையில் ஒரு ஆண் என்பதையும், ஈ.எஸ்.எச் என அடையாளம் காணப்பட்டதையும், 2020 முதல் பெண் உடை அணிந்து வருவதையும் ஏ.கே. கண்டுபிடித்தார்.
போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணையில், கன்சா தனது குடும்பத்தின் சொத்துக்களை திருடுவதற்காக ஏ.கே.யை திருமணம் செய்ததாக தெரிவித்தார். போலீசாரின் கூற்றுப்படி, கன்சா பெண் போன்ற நலினமான குரலுடன் நன்றாக மாறுவேடத்தில் அச்சு அசலாக பெண் பேலவே இருந்துள்ளார்.
கான்சாவின் திருமண புகைப்படங்களை பார்த்தால், கான்சா நிஜமான பெண்ணைப் போலவே தோற்றமளித்துள்ளார். அவர் பெண் என்பதில் எந்த சந்தேகமும் இல்லாமல் இருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா சட்டங்களின் கீழ், கான்சா மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். இந்த குற்றத்துக்காக அவருக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க நேரிடும்.
சொத்துக்காக அச்சு அசல் பெண் போன்றே தோற்றத்தில் மாறி ஆணுடன் பழகி, அவரை திருமணம் செய்து கொண்டு மோசடியில் ஈடுபட்ட இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
