George Reddy: கிக் பாக்ஸர்.. இந்திய மாணவர் சமூகத்தின் முக்கிய போராளி.. திரையில் ஜார்ஜ் ரெட்டியாக பிரதிபலித்த சூர்யா
George Reddy: இந்திய மாணவர் சமூகத்தில் முக்கிய போராளியாகவும், பிடிஎஃப் என்கிற மாணவர் அமைப்பு உருவாக காரணமாக இருந்தவர் ஜார்ஜ் ரெட்டி. இவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தான் மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து படத்தின் சூர்யா கேரக்டர் அமைந்திருக்கும்.

இந்திய மாணவ சமூகத்தினருக்கு மிகவும் பரிச்சயமான, மறக்க முடியாத பெயர்களில் ஜார்ஜ் ரெட்டி. பிடிஎஃப் எனப்படும் மார்கிசிய லெனினிஸ்ட் கொள்கை கொண்ட முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்கம் அமைய காரணமாக இருந்தவராக உள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேசத்தில் முக்கிய மாணவர் அமைப்பாக இருந்து வரும் பிடிஎஃப் தற்போது ஆந்திரா, தெலங்கானா என தெலுங்கு பேசும் மாநிலங்களில் மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பதோடு, இந்தியாவின் மிக முக்கியமான மாணவர் அமைப்புளின் ஒன்றாக திகழ்கிறது. பல்வேறு மாநிலங்களிலும் இந்த மாணவர் சங்கமானது இயங்கி வருவதுடன், மாணவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிராக குரல் எழுப்பும் அமைப்பாகவும் இருந்து வருகிறது
ஜார்ஜ் ரெட்டி பின்னணி
தெலுங்கு அப்பாவும், மலையாளி அம்மாவுக்கும் பிறந்தவரான ஜார்ஜ் ரெட்டி ஹைதராபாத்தில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அத்துடன் அங்குள்ள பழமை வாய்ந்த் பல்கலைகழகமான ஒஸ்மானியா யுனிவெர்சிட்டியில் அணு இயற்பியலில் தங்க பதக்கம் வாங்கினார்.
