ஜி 20 மாநாட்டில் பங்கேற்க புறப்பட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி! பயண திட்ட விவரம் என்ன?
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பது பிரதமரின் முக்கிய நிகழ்வாகும்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் முக்கிய நிகழ்வாக அவர் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டில் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்னைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி முன்வைப்பார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா நடத்திய ஜி 20 புது டெல்லி தலைவர்களின் பிரகடனம் மற்றும் உலகளாவிய தெற்கு உச்சி மாநாடுகளின் குரல் ஆகியவற்றின் முடிவுகளை தெரிவிப்பார். இத்தகவலை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பிரமரின் வெளிநாட்டு பயண வரிசையில் பிரதமர் நவம்பர் 16 (இன்று) முதல் 21 வரை நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய நாடுகளில் இருப்பார்.
பிரதமர் மோடியின் வெளிநாடு சுற்றுப்பயண நிகழ்ச்சி நிரலில் என்ன உள்ளது?
நைஜீரியா (நவம்பர் 16-17) : தனது பயணத்தின் முதல் கட்டமாக, பிரதமர் மோடி சனிக்கிழமையே நைஜீரியா செல்கிறார், ஆப்பிரிக்க தேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை அவர் பெறுவார். 17 ஆண்டுகளில் நைஜீரியா செல்லும் முதல் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார்.
நைஜீரிய அதிபர் போலா அகமது டினுபு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னதாக அழைப்புவிடுத்திருந்தால், இதையடுத்து அவர் அங்கு செல்கிறார். அங்கு தங்கும் குறுகிய காலத்திலும் பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை குறித்து ஆய்வு செய்வார். நைஜீரியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரையும் அவர் சந்தித்துவிட்டு, அங்கிருந்து பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார்.
பிரேசில் (நவம்பர் 18-19) : பின்னர் அவர் பிரேசிலின் இரண்டாவது பெரிய நகரமான ரியோ டி ஜெனிரோவுக்கு வருகிறார். அங்கு நடைபெறும் ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார். இது மூன்று நாடுகளின் சுற்றுப்பயணத்தின் முக்கிய நிகழ்வாக இருக்கும்.
அந்த மாநாட்டில் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பிரச்னைகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி முன்வைப்பார். மேலும் கடந்த இரண்டும் ஆண்டுகளில் இந்தியா நடத்திய இந்தியா நடத்திய ஜி 20 புது டெல்லி தலைவர்களின் பிரகடனம் மற்றும் உலகளாவிய தெற்கு உச்சி மாநாடுகளின் குரல் ஆகியவற்றின் முடிவுகளை தெரிவிப்பார். இத்தகவலை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அவர் புறப்படுவதற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கையில், அவர் "பல தலைவர்களுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதலாக, இந்தியா "ஜி 20 முக்கூட்டில்" உறுப்பினராக உள்ளது. அந்த அடிப்படையில் முந்தைய மாநாட்டை இந்தியா நடத்தியது. தற்போதை மாநாட்டை பிரேசில் நடத்துகிறது மற்றும் அடுத்த மாநாட்டை தென்னாப்பிரிக்கா நடத்தும்.
கயானா (நவம்பர் 20-21) : தனது பயணத்தின் இறுதிக் கட்ட நிகழ்வாக பிரதமர் நரேந்திர மோடி தென் அமெரிக்க நாடான கயானா செல்கிறார்.
ஜனாதிபதி முகமது இர்பான் அலியின் அழைப்பின் பேரில், அந்த நாட்டுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார். 50 ஆண்டுகளில் அந்த நாட்டுக்குச் செல்லும் முதல் பிரதமராக நரேந்திர மோடி உள்ளார்.
அதிபர் அலியுடனான இருதரப்பு சந்திப்பு, வெளிநாடுவாழ் இந்தியர்களிடையே உரை, கயானா நாடாளுமன்றத்தில் உரை மற்றும் 2 வது இந்தியா-கரிகாம் உச்சி மாநாட்டில் பங்கேற்பது ஆகியவை பிரதமரின் நிகழ்ச்சிகளில் அடங்கும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்