TOP 10 INDIA AND WORLD NEWS: ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்துக்கு ஒப்புதல்.. இந்தியா - உலகம் முழுவதும் நடந்த நிகழ்வுகள்-indian government approves integrated pension scheme to protests against sex crimes in top 10 india and world news - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Top 10 India And World News: ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்துக்கு ஒப்புதல்.. இந்தியா - உலகம் முழுவதும் நடந்த நிகழ்வுகள்

TOP 10 INDIA AND WORLD NEWS: ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்துக்கு ஒப்புதல்.. இந்தியா - உலகம் முழுவதும் நடந்த நிகழ்வுகள்

Marimuthu M HT Tamil
Aug 24, 2024 11:14 PM IST

TOP 10 INDIA AND WORLD NEWS: ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்துக்கு ஒப்புதல்.. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் நடந்த நிகழ்வுகள் வரை முக்கிய நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பை பார்ப்போம்.

TOP 10 INDIA AND WORLD NEWS: ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்துக்கு ஒப்புதல்.. இந்தியா - உலகம் முழுவதும் நடந்த நிகழ்வுகள்
TOP 10 INDIA AND WORLD NEWS: ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்துக்கு ஒப்புதல்.. இந்தியா - உலகம் முழுவதும் நடந்த நிகழ்வுகள்
  • இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகஸ்ட் 23 முதல் 26 வரை, நான்கு நாட்கள் பயணமாக அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார். இதில் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மற்றும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சந்திப்பு நடந்தது. இதில் இந்தியா அமெரிக்காவின் நீர்மூழ்கி சோனோபாய் கருவிகளை வாங்குவதற்கு ஒப்பந்தம் இட்டுள்ளது.
  • வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் இருக்கும் ஹூலுடாங் நகரத்தில் கடந்த சில வாரமாக கனமழை பெய்துகொண்டு இருக்கிறது. இந்த கனமழையில் 20க்கும் மேற்பட்டோர் பலியானதாக அஞ்சப்படுகிறது. பலர் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணியில் மீட்புக்குழுவும் ஈடுபட்டு வருகிறது. இந்த கனமழையால் கிட்டத்தட்ட ரூ.150 கோடிக்கும் மேற்பட்ட சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • கொல்கத்தா அரசு நடத்தும் ஆர்.ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் முக்கியக்குற்றவாளி மற்றும் ஆறு பேர் மீதான உண்மை கண்டறிதல் சோதனைகள் இன்று(ஆகஸ்ட் 24) தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முக்கியக் குற்றவாளியான சஞ்சய் ராய் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையில் பாலிகிராஃப் சோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பத்லாபூர் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடந்த போராட்டங்கள்:

  • பத்லாபூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதைத் தடுக்கவும் மழைக்கு மத்தியில், நெற்றி மற்றும் கைகளில் கருப்பு பட்டைகளை அணிந்து, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி-எஸ்பி), உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாதியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று(ஆகஸ்ட் 24) மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில், பத்லாபூர் பாலியல் வன்கொடுமை வழக்குக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  • ஹெல்த்கேர் இன்ஸ்யூரன்ஸ் மென்பொருள் தொடர்பான தங்களது நிறுவனத்தின் ரகசியங்களைத் திருடியதாக, இன்போஸிஸ் நிறுவனத்தின் மீது டெக்ஸாஸ் பெடரல் நீதிமன்றத்தில் காக்னிசென்ட் நிறுவனம் சார்பில் வழக்குத்தொடுக்கப்பட்டுள்ளது.
  • பத்லாப்பூரில் மழலையர் பள்ளியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் பெண்களுக்கு பாதுகாப்பு கோரியும் நடத்தப்பட்ட போராட்டத்தில் பேசிய சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, ‘மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. குற்றவாளி கைதுசெய்யப்படும் வரை போராட்டத்தை நிறுத்தமாட்டோம்’ எனக் கூறியிருக்கிறார்.

அதிக லைக்ஸ்களை குவித்த பிரதமர் மோடியின் படம்:

  • அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக உக்ரைன் நாட்டுக்குச் சென்று, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியுடன் எடுத்த தனது படத்தை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அந்தப் படத்திற்கு 15 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது.
  • ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் என்னும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கு 50 விழுக்காடு ஓய்வூதியம் என்ற வகையில், ஓய்வூதியம் கிடைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் வரக்கூடிய 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு கூறியுள்ளது.
  • இந்தியாவில் 90 விழுக்காடு மக்களுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம் எனவும், இதன்மூலம் ஏழை, தொழிலாளிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்றும் ராகுல்காந்தி கூறியுள்ளார். இதனை உத்தரப்பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கூறியுள்ளார்.
  • கடந்த ஒரு மாதத்தில் வங்கதேசத்தில் இருக்கும் இந்துக்கள் இந்தியாவிற்கு இடம்பெயராமல், பாதிக்கப்பட்ட வங்கதேசத்திலேயே தங்கிப் போராடி வருகின்றனர். ஆனால், 35 இஸ்லாமியர்கள் அஸ்ஸாமிற்குள் நுழைந்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறினார்.

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.