Ram Mandir ceremony at Times Square: டைம்ஸ் ஸ்கொயரில் ராமர் கோயில் விழாவை கொண்டாடிய இந்திய வம்சாவளியினர்!-indian diaspora celebrates ram mandir ceremony at times square plaza in new york - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ram Mandir Ceremony At Times Square: டைம்ஸ் ஸ்கொயரில் ராமர் கோயில் விழாவை கொண்டாடிய இந்திய வம்சாவளியினர்!

Ram Mandir ceremony at Times Square: டைம்ஸ் ஸ்கொயரில் ராமர் கோயில் விழாவை கொண்டாடிய இந்திய வம்சாவளியினர்!

Manigandan K T HT Tamil
Jan 22, 2024 09:58 AM IST

நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயரில் திரண்ட இந்திய புலம்பெயர்ந்தோர், பிராண பிரதிஷ்டா விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

டைம்ஸ் ஸ்கொயரில் ராமரின் படத்தை ஒளிரவிட்டு கொண்டாடி மகிழ்ந்த இந்திய வம்சாவளியினர்
டைம்ஸ் ஸ்கொயரில் ராமரின் படத்தை ஒளிரவிட்டு கொண்டாடி மகிழ்ந்த இந்திய வம்சாவளியினர் (ANI)

டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள திரைகளில், ராமரின் படங்கள் காட்டப்பட்டன. ராமரின் படம் பொறிக்கப்பட்ட காவிக் கொடிகளை பலரும் அசைத்தனர்.

 

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. பாஜகவின் 50 ஆண்டுகால திட்டத்திற்காக ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி செல்கிறார்.

இதற்கிடையில், டைம்ஸ் சதுக்கத்தில், 'ராமர் கோயிலின் வெளிநாட்டு நண்பர்கள்' உறுப்பினர்கள் லட்டுகளை விநியோகித்தனர்.

இந்த அமைப்பின் உறுப்பினரான பிரேம் பண்டாரி இந்த நிகழ்ச்சியை அமெரிக்காவில் கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இந்த நிகழ்ச்சியுடன் அனைத்து தரப்பு மக்களையும் இணைத்ததற்காக மோடியை அவர் பாராட்டினார்.

"எங்கள் வாழ்நாளில் இந்த தெய்வீக நாளை நாங்கள் காண்போம் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. பிராண பிரதிஷ்டா விழா மிக விரைவில் நடைபெறும். டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள மக்களும் இதைக் கொண்டாடுகிறார்கள், மேலும் இந்த இடம் அயோத்திக்கு குறைவில்லாமல் தோற்றமளிக்கிறது. இந்திய வம்சாவளியினர் இந்த நிகழ்வை பல்வேறு இடங்களில் கொண்டாடுகிறார்கள்" என்று பண்டாரி கூறினார்.

டைம்ஸ் சதுக்கத்தில் இருந்த சில விளம்பரப் பலகைகளில் ராமரின் ஓவியம் பொறிக்கப்பட்டிருந்தது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கொடிகளை அசைத்தும், ஒலி எழுப்பியும், மேளங்களை அடித்தும் அயோத்தியில் குவிந்துள்ளனர், ரயில்கள் நிரம்பி வழிகின்றன.

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராம் லல்லாவுக்கான 50 மீட்டர் உயர வழிபாட்டு இல்லம் கட்டப்பட்டது.

மதியம் 12.20 மணியளவில் தொடங்கும் இந்த பிரண பிரதிஷ்டை விழாவில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட கிட்டத்தட்ட 7,000 அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 22 ஆம் தேதி திட்டமிடப்பட்ட நிகழ்வுகளின் முழு அட்டவணை இங்கே:

காலை 10:25 மணிக்கு, பிரதமர் நரேந்திர மோடி அயோத்திக்கு வருவார். அயோத்தி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மோடி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருவார்.

காலை 10:55 மணிக்கு மோடி ராமர் கோயில் வளாகத்தை அடைவார்.

காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை, பிரதமர் ராமர் கோயில் வளாகத்தை சுற்றிப் பார்ப்பார்.

மதியம் 12:05 மணி முதல் 1 மணி வரை, மோடி சடங்குகளுக்கு தலைமை தாங்க, பிராண-பிரதிஷ்டை விழா தொடங்கும்.

பிற்பகல் 1 மணியளவில் கோயில் வளாகத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, சுமார் 7,000 பேர் திரளும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

பிற்பகல் 2:10 மணிக்கு, பகவான் சிவனின் பழங்கால கோயிலான புதுப்பிக்கப்பட்ட குபேர கா திலாவை மோடி பார்வையிடுவார்.

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் முக்கிய அம்சங்கள்

பொதுவாக ராமர் கோயில் என்று அழைக்கப்படும் ராம் ஜென்மபூமி மந்திர் பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் நீளம் (கிழக்கு-மேற்கு) 380 அடி; அகலம் 250 அடி, உயரம் 161 அடி. இது மொத்தம் 392 தூண்களால் ஆதரிக்கப்படுகிறது மற்றும் 44 கதவுகளைக் கொண்டுள்ளது.

கோயிலின் தூண்கள் மற்றும் சுவர்கள் இந்து தெய்வங்கள், கடவுள்கள் மற்றும் தேவியர்களின் சிக்கலான சிற்பங்களை வெளிப்படுத்துகின்றன. ராமர் கோயிலின் தரை தளத்தில் உள்ள பிரதான கருவறையில், ராம் லல்லாவின் சிலை வைக்கப்பட்டுள்ளது.

ராம் லல்லாவின் புதிய 51 அங்குல சிலையின் 'பிரான்-பிரதிஷ்டா'வுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பதினான்கு ஜோடிகள் 'யஜ்மான்' (புரவலர்கள்) இருப்பார்கள். மைசூருவைச் சேர்ந்த அருண் யோகிராஜ் என்பவரால் செதுக்கப்பட்ட இந்த சிலை கடந்த வியாழக்கிழமை கோயிலின் கருவறையில் வைக்கப்பட்டது.

ராம் மந்திர் பூக்கள் மற்றும் சிறப்பு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது மற்றும் முழு நகரமும் உற்சாகத்தில் நனைந்துள்ளது.

ஜனவரி 16 ஆம் தேதி சடங்குகள் தொடங்கின

பிராண பிரதிஷ்டாவுக்கு' கும்பாபிஷேக சடங்குகள் ஜனவரி 16 ஆம் தேதி சரயு நதியில் தொடங்கி திங்கள்கிழமை பிற்பகல் 'அபிஜீத் முகூர்த்தத்தில்' நிறைவடையும் என்று கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

ஜனவரி 22 ஆம் தேதி அரை நாள் விடுமுறையை அரசாங்கம் அறிவித்துள்ளதாலும், பல மாநிலங்கள் இதைப் பின்பற்றியதாலும் லட்சக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வை தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் தளங்களில் நேரடியாகப் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கோயில்கள் சிறப்பு விழாக்களை அறிவித்துள்ளன.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.