Mamata Banerjee: 'பாவிகள் கலந்து கொண்ட ஒரு போட்டியைத் தவிர மற்ற அனைத்திலும் இந்திய அணி வெற்றி'-மம்தா பானர்ஜி
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை அகமதாபாத்திற்குப் பதிலாக கொல்கத்தா அல்லது மும்பையில் நடத்தியிருந்தால் இந்தியா வென்றிருக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் "பாவிகள்" கலந்து கொண்ட போட்டியைத் தவிர அனைத்து போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
"இந்திய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது, அவர்கள் உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றனர், பாவிகள் கலந்து கொண்ட போட்டியைத் தவிர," என்று மம்தா பானர்ஜி யாரையும் குறிப்பிடாமல் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார நிலை குறித்தும் பானர்ஜி மத்திய அரசை தாக்கிப் பேசினார். "வங்கித் துறை மந்தமான நிலையில் உள்ளது மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகின்றன," என்று அவர் கூறினார், வேலையின்மை விகிதமும் மிக அதிகமாக இருப்பதாக கூறிய அவர், "வங்கதேசத்திற்கு கடத்துவதற்காக மாடுகள் உ.பி. உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. அங்கு வெட்டுவது யார்," என்று கேள்வி எழுப்பினார் மம்தா பானர்ஜி.
முதலீட்டுக்கான இடமாக மேற்கு வங்கம் வேகமாக உருவாகி வருவதாக கூறிய மம்தா. "அனைத்து பெரிய ஐடி நிறுவனங்களும் கொல்கத்தாவின் 'சிலிகான் வேலி' திட்டத்தில் முதலீடு செய்கின்றன," என்று தெரிவித்தார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, திரைப் பிரபலங்கள் தீபிகா படுகோன், ரண்வீர் சிங், ஷாருக் கான் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கெட்ட சகுனம் என்று பேசியதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது பாரதிய ஜனதா கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
