Himanta Biswa Sarma: ‘இந்திரா காந்தி பிறந்த நாளில் விளையாடியதால் தான் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி’-அசாம் முதல்வர்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Himanta Biswa Sarma: ‘இந்திரா காந்தி பிறந்த நாளில் விளையாடியதால் தான் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி’-அசாம் முதல்வர்

Himanta Biswa Sarma: ‘இந்திரா காந்தி பிறந்த நாளில் விளையாடியதால் தான் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி’-அசாம் முதல்வர்

Manigandan K T HT Tamil
Nov 23, 2023 01:04 PM IST

இந்திரா காந்தியின் பிறந்தநாளில் விளையாடியதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததாக அசாம் முதல்வர் ஹிமந்தா விஸ்வ சர்மா கருத்து தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்மா
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்மா (PTI)

"அன்றைய தினம் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உலகக் கோப்பை போட்டி நடந்தது. ஒவ்வொரு ஆட்டத்திலும் நாம் வெற்றி பெற்றோம். ஆனால், இறுதிப் போட்டியில் தோற்றோம். பிறகு வந்து யோசித்துப் பார்த்தேன். அந்த நாள் என்ன? ஏன் தோற்றோம்? என தீவிரமாக சிந்தித்தேன். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளான அந்த நாளில்தான் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடந்ததை கண்டறிந்தேன். அதனால், நாம் தோல்வி அடைந்திருக்கிறோம் என்று தெரிந்தது'' என்றார் ஹிமந்த விஸ்வ சர்மா.

பிரதமர் நரேந்திர மோடியை எதிர்ப்பவர்களுடன் எதிர்க்கட்சிகள் "கூட்டு" கொண்டுள்ளன என்று ஹிமந்த விஸ்வ சர்மா குற்றம் சாட்டினார். நேரு-காந்தி குடும்ப உறுப்பினரின் பிறந்தநாளுடன் இணைந்த நாளில் இறுதிப் போட்டி நடத்தப்படாமல் இருப்பதை பிசிசிஐ உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

"இந்திரா காந்தி பிறந்தநாளில் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடத்தப்பட்டதால் நமது அணி தோற்றது. உலகக் கோப்பை இறுதி ஆட்டம் என்றால் யோசியுங்கள். இல்லையெனில், நமது நாட்டு அணி தோல்வி அடைய நேரிடும்," என்று பிடிஐ மேற்கோள் காட்டியது.

செவ்வாயன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி "பிரதமர் நரேந்திர மோடி துரதிர்ஷ்டத்தை கொண்டு வருகிறார். அவர் உலகக் கோப்பை நேரில் கண்டு ரசித்ததால் தான் இந்திய கிரிக்கெட் அணி தோற்றது' என்று கூறியிருந்தார்.

பாஜக அவரது கருத்தை "வெட்கக்கேடானது மற்றும் அவமானகரமானது" என்று கண்டித்துடன், அத்தகைய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது.

பாஜக எம்பி ரவிசங்கர் பிரசாத், ராகுலை விமர்சித்தார்.

“ராகுல் காந்தி உங்களுக்கு என்ன ஆனது? இதுபோன்ற வார்த்தைகளை நாட்டின் பிரதமருக்கு எதிராக பயன்படுத்துகிறீர்கள். நமது பிரதமர் வீரர்களை சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்தினார். வெற்றி தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதி. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.