Maharashtra election: பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் பாஜக கூட்டணி தொடர்ந்து முன்னிலை!
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி 63 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பான்மையை கடந்துள்ளது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 214 தொகுதிகளில் அக்கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) 63 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. ஜார்க்கண்டிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
பாஜக கூட்டணி அபார முன்னிலை
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த நவம்பர் 20-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மாநிலத்தில் 66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன, இது 2019 எண்ணிக்கையான 61 சதவீதத்தை விஞ்சியது.
பாஜக, சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் நம்பிக்கையில் உள்ளது. சிவசேனா (யுபிடி) மற்றும் என்சிபி (எஸ்சிபி) ஆகியவற்றை உள்ளடக்கிய காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி, பாஜகவிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுக்குப் பிறகு மகாராஷ்டிராவில் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்தன. இருப்பினும், மகாராஷ்டிராவில் கிடுக்கிப்பிடி போட்டி ஏற்படும் என்று சிலர் கணித்தனர்.
போட்டியிட்ட தொகுதிகள் நிலவரம்
பாஜக 149 தொகுதிகளிலும், சிவசேனா 81 தொகுதிகளிலும், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் போட்டியிட்டன. எதிர்க்கட்சிகளின் எம்.வி.ஏ முகாமில், காங்கிரஸ் 101 வேட்பாளர்களையும், சிவசேனா (யுபிடி) 95 வேட்பாளர்களையும், என்சிபி (எஸ்சிபி) 86 வேட்பாளர்களையும் நிறுத்தின. பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) போன்ற அணிசேராத கட்சிகள் முறையே 237 மற்றும் 17 இடங்களில் போட்டியிட்டன.
ஜார்க்கண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி 68 இடங்களிலும், கூட்டணி கட்சியான ஏஜேஎஸ்யூ கட்சி 10 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. ஜே.எம்.எம் 43 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும், ஆர்.ஜே.டி 6 இடங்களிலும், சிபிஐ (எம்.எல்) 4 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தின.
டாபிக்ஸ்