Rahul Gandhi Second Constituency: ராகுல் காந்தியின் இரண்டாவது தொகுதி இதுவா?
Rahul Gandhi Second Constituency: கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டியிடும் நிலையில், உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதி, ராகுல் காந்தி போட்டியிடும் இரண்டாவது தொகுதியாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் போட்டியிட்டு வென்ற வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். இது இவ்வாறு இருக்க, ராகுல் காந்தியின் இரண்டாவது போட்டியிடும் தொகுதியாக அமேதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் மக்களவைத் தேர்தலில் கேரளாவில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 39 பெயர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது.
2024 மக்களவைத் தேர்தலுக்கான 39 வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை இன்று(மார்ச் 8) வெளியிட்டது. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி, ராஜ்நந்த்கான் தொகுதியில் சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், திருவனந்தபுரம் தொகுதியில் சசி தரூர் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு ஊரக தொகுதியில் டி.கே.சுரேஷும், கண்ணூரில் கே.சுதாகரனும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அலபுசா தொகுதியில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் 39 வேட்பாளர்களின் முதல் பட்டியலில், 15 பேர் பொதுப் பிரிவினைச் சேர்ந்தவர்கள், 24 வேட்பாளர்கள் பட்டியலின சிறுபான்மையினர் பிரிவினைச் சார்ந்தவர்கள். முதல் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது, மூத்த தலைவர்கள் விவேகமான இந்தப் பணிக்குப் பின்னால் அதிக கவனம் செலுத்தியதாக காங்கிரஸ் தலைமை கூறியது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று(மார்ச் 7)நடைபெற்ற காங்கிரஸ் மத்தியத் தேர்தல் குழுவின் முதல் கூட்டத்திற்குப் பிறகு, பெயர்கள் இறுதி செய்யப்பட்டன. ராகுல் காந்தி ஜூம் அழைப்பு மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
ராகுல் காந்தி இரண்டாவது தொகுதியில் போட்டியிடுவாரா என்பதும், அது உத்தரப்பிரதேசத்தின் அமேதி தொகுதியாக இருக்குமா என்ற சஸ்பென்ஸ்ஸும் நீடிக்கிறது. இன்னும் அது முடிவடையாத நிலையில், மீதமுள்ள சில முக்கியத் தொகுதிகள் குறித்தும் அடுத்தடுத்த கூட்டங்களில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் அமேதி தொகுதி, மிக முக்கியமான தொகுதியாகப் பார்க்கப்படுகிறது. அதற்குக் காரணம், 1980ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அமேதி மக்களவைத் தொகுதியில், இந்திரா காந்தியின் இளையமகன் சஞ்சய் காந்தி வென்றார். அவர் விமான விபத்தில் மரணமடைந்தபின், ராஜீவ் காந்தி அத்தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு 1981ஆம் வென்றார். அதன்பின், 1984, 1989, 1991ஆகிய தேர்தல்களிலும் ராஜீவ் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு பிரதமர் ஆனார். ராஜீவ் காந்தியின் மரணத்துக்குப் பின், சதீஷ் சர்மா என்னும் காங்கிரஸ் வேட்பாளர் வென்றார். அதனைத்
தொடர்ந்து, 1999ஆம் ஆண்டு, சோனியா காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். அதன்பின், 2004ஆம் ஆண்டு, 2009ஆம் ஆண்டு, 2014ஆம் ஆண்டு ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை வென்றார். இறுதியாக, 2019ஆம் ஆண்டு,போட்டியிடும்போதுதான் தோற்றார். எனவே, அமேதி தொகுதி இன்னும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது.
முன்னதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவிப்பினை வெளியிட்டு கூறுகையில், ‘’தேர்தல் பிரசாரத்தில் ஆக்ரோஷமான பாதையில் செல்கிறோம். ராகுல் காந்தி பாரத் ஜோதோ நியாய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். குஜராத்தை அடைந்து மணிப்பூரில் துவங்கி மும்பையில் இந்தப் பயண யாத்திரை நிறைவடையும்.
காங்கிரஸின் மத்தியத் தேர்தல் குழு இன்று 39 வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பெயரும், சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகேலின் பெயரும் உள்ளது" என்று தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்