Budget 2024: வருமான வரி விகிதத்தில் மாற்றம் இருக்கிறதா.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது என்ன?
2024 இடைக்கால பட்ஜெட்டில் வருமான வரி அடுக்கு விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லாதது சம்பளதாரர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது

“வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பட்ஜெட் என்று வரும்போது, சம்பளதாரர்கள் எதிர்பார்க்கும் ஒரே விஷயம் வருமான வரிச் சலுகை மட்டுமே. பிப்ரவரி 1, 2024 அன்று இடைக்கால பட்ஜெட் 2024 ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது, புதிய மற்றும் பழைய வருமான வரி முறைகளுக்கான வரி அடுக்கு விகிதங்களை மாற்றாமல் வைத்திருந்தார்.
ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படாது - ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும் (பிரிவு 87ஏ-ன் கீழ் வரிச்சலுகை உள்ளது) - ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் (ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்திற்கு பிரிவு 87 ஏ-ன் கீழ் வரிச்சலுகை கிடைக்கும்) -ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருமானம் ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருமானம் 20 சதவீதம்-வருமானம் ரூ.15 லட்சம் மற்றும் அதற்கு மேல் 30 சதவீத வரி விதிக்கப்படும்.
புதிய வரி விதிப்பு முறையில் வரி விகிதங்கள் அனைத்து வகை தனிநபர்களுக்கும், அதாவது தனிநபர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் சீனியர் சிட்டசன்களுக்கு ஒரே மாதிரியாக இருக்கும்.
பழைய வரிவிதிப்பு முறைகள்
1) பழைய வரிவிதிப்பு முறையின் கீழ் ரூ.2.5 வரையிலான வருமானத்திற்கு வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
2) ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
3) பழைய வரிவிதிப்பு முறையில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான தனிநபர் வருமானத்திற்கு 20 சதவீத வரி விதிக்கப்பட்டது.
4) பழைய வரிவிதிப்பு முறை கீழ், ரூ .10 லட்சத்திற்கு மேல் தனிநபர் வருமானத்திற்கு 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
பழைய வரி விதிப்பு முறையில், 60 வயதுக்கு மேற்பட்ட ஆனால் 80 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்களுக்கு வருமான வரி விலக்கு வரம்பு ரூ .3 லட்சம் வரையும், 80 வயதுக்கு மேற்பட்ட சூப்பர் மூத்த குடிமக்களுக்கு ரூ .5 லட்சம் வரையும் வருமான வரி விலக்கு வரம்பு இருந்தது.
நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் வரிச் செலவைக் குறைக்க உதவும் சில வருமான வரி சீர்திருத்தங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
முழு பட்ஜெட், ஜூலை மாதம் அடுத்து வரவிருக்கும் அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்படும்.
இந்நிலையில், "கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை உயர்வு" என அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் தெரிவித்தார். நாடு முழுவதும் மருத்துவக்கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக தனிக் குழு அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு 2027-ல் நனவாகும், பெண்களுக்கான சட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
முத்ரா திட்டத்தின் கீழ் 43 கோடி முறை வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

டாபிக்ஸ்