Blue Origin Space Tourism: ப்ளூ ஆர்ஜின் விண்வெளி பயணத்தில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி பைலட்
Blue Origin Space Tourism: ப்ளூ ஆரிஜின் விண்வெளி சுற்றுலாவில், ப்ளூ ஆரிஜின் நியூ ஷெப்பர்ட் 25 மிஷனில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழில்முனைவோரும், பைலட்டுமான கோபிசந்த் தோட்டகுரா, ஆறு குழு உறுப்பினர்களில் ஒருவராக உள்ளார்.

ப்ளூ ஆர்ஜின் விண்வெளி பயணத்தில் இடம்பிடித்த இந்திய வம்சாவளி பைலட் (Blue Origin)
கடந்த 2022 செப்டம்பரில் ப்ளூ ஆரிஜின் நியூ ராக்கெட் விபத்தைத் தொடர்ந்து, அதன் விண்வெளி சுற்றுலா நடவடிக்கைகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டது. இதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த பயணம் இன்று தொடர ராக்கெட் வெற்றிகரமாக வானில் பறந்தது.
இந்த மிஷன் நியூ ஷெப்பர்ட் திட்டத்துக்கான ஏழாவது மனித விமானத்தையும், அந்த திட்டத்தின் வரலாற்றில் 25வது விமானமுமாக அமைந்துள்ளது.
இந்திய வம்சாவளி பைலட்
ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நியூ ஷெப்பர்ட் 25 (என்எஸ் 25) மிஷனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு குழு உறுப்பினர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் பைலட்டான கோபிசந்த் தோட்டகுராவும் ஒருவராக உள்ளார். இந்த குழுவில் அமெரிக்காவின் முதல் கறுப்பின விண்வெளி வீரரான முன்னாள் விமானப்படை கேப்டன் எட் டுவைட்டும் இடம்பிடித்துள்ளார்.