தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Narendra Modi On Obc: நான் உயிருடன் இருக்கும் வரை இதை செய்ய விடமாட்டேன்! சத்தியம் செய்த மோடி? எது தெரியுமா?

Narendra Modi On OBC: நான் உயிருடன் இருக்கும் வரை இதை செய்ய விடமாட்டேன்! சத்தியம் செய்த மோடி? எது தெரியுமா?

Kathiravan V HT Tamil
May 25, 2024 08:46 PM IST

Narendra Modi On OBC: இந்தியா கூட்டணி தங்கள் வாக்கு வங்கியின் அடிமைத்தனத்தை ஏற்க விரும்பினால், அவர்கள் அதைச் செய்ய சுதந்திரம் உண்டு. நான் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுடன் நிற்கிறேன். ஓபிசி இட ஒதுக்கீடு உறுதியாக உள்ளது என பிரதமர் கூறி உள்ளார்.

நான் உயிருடன் இருக்கும் வரை இதை செய்ய விடமாட்டேன்! சத்தியம் செய்த மோடி? எது தெரியுமா?
நான் உயிருடன் இருக்கும் வரை இதை செய்ய விடமாட்டேன்! சத்தியம் செய்த மோடி? எது தெரியுமா? (BJP)

ட்ரெண்டிங் செய்திகள்

உயிர் இருக்கும் வரை 

உத்தரப்பிரதேச மாநிலம் காசிபூரில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்தினருக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன், மோடி உயிருடன் இருக்கும் வரை, அவர்களின் உரிமைகளைப் பறிக்க விடமாட்டேன். மோடிக்கு, அரசியலமைப்புச் சட்டம் உயர்ந்தது, மோடிக்கு, பாபாசாகேப் அம்பேத்கரின் உணர்வுகள்தான் உயர்ந்தவை என கூறினார். 

ஓபிசி மக்களுக்கான இடஒதுக்கீடு 

இந்தியா கூட்டணி தங்கள் வாக்கு வங்கியின் அடிமைத்தனத்தை ஏற்க விரும்பினால், அவர்கள் அதைச் செய்ய சுதந்திரம் உண்டு. நான் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களுடன் நிற்கிறேன். ஓபிசி இட ஒதுக்கீடு உறுதியாக உள்ளது என பிரதமர் கூறி உள்ளார்.

சமாஜ்வாதி ஆட்சியை சாடிய மோடி

சமாஜ்வாடி கட்சி ஆட்சியில், மாஃபியாக்களை வளர்த்ததால், உத்தரபிரதேசத்தில் பெரும் கலவரம் நடந்ததாக குற்றம்சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, "சமாஜ்வாதி கட்சி ஆட்சியில், திறந்தவெளி ஜீப்பில் சட்டத்தை எதிர்த்து மாஃபியாக்கள், தங்கள் எதிரிகளை சுட்டுக்கொன்றனர். 

ஒவ்வொரு மாதமும், சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் 2 முதல் 3 பெரிய கலவரங்கள் நடந்தன. இது ஏழைகள், கடைக்காரர்கள் மற்றும் வணிகர்களை பாதித்தது. மாஃபியாவைக்களை வளர்த்தது உடன் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிடவும் அக்கட்சி வாய்ப்பு கொடுத்தது என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். 

மக்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரஸ்

பணிகளை தாமதப்படுத்துவதிலும், மக்களின் உரிமைகளை பறிப்பதிலும் காங்கிரஸ் கட்சி கைதேர்ந்தவர்கள் என்று கூறினார். 

"காஜிபூர் மக்களுக்கு துரோகம் இழைத்ததற்காக" இந்தியா கூட்டணியை தாக்கிய பிரதமர், சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த பகுதியை மேம்படுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் சபதம் செய்ததாக குற்றம்சாட்டினார். இங்குள்ள மக்கள் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி கூறினார். 

நாடாளுமன்றத் தேர்தல் நிலவரம் 

மக்களவைத் தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.  இதுவரை 58 தொகுதிகளில் 59 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரத்தின்படி, மேற்கு வங்கத்தில் 70.19 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. ஜார்கண்ட் மாநிலத்தில் 54.34 சதவீதமும், உத்தரபிரதேச மாநிலத்தில் 43.95 சதவீதமும், ஒடிசா மாநிலத்தில் 48.44 சதவீதமும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 44.41 சதவீதமும், பீகார் மாநிலத்தில் 45.21 சதவீதமும், ஹரியானா மாநிலத்தில் 46.26 சதவீதமும், டெல்லியில் 44.58 சதவீதமும் பதிவாகி உள்ளது. 

இன்று நடைபெற்ற ஆறாவது கட்ட மக்களவைத் தேர்தலில் பீகாரில் 8 இடங்களிலும், ஹரியானாவில் 10 இடங்களிலும், ஜம்மு காஷ்மீரில் ஒரு இடத்திலும், ஜார்க்கண்டில் 4 இடங்களிலும், டெல்லியில் 7 இடங்களிலும், ஒடிசாவில் 6 இடங்களிலும், உத்தரப் பிரதேசத்தில் 14 இடங்களிலும், மேற்கு வங்கத்தில் 8 இடங்களிலும் என வாக்குப்பதிவு நடைபெற்றது.

முதல் ஐந்து கட்ட பொதுத் தேர்தல்களில் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான 428 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

இதுவரை 6 கட்ட நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 57 தொகுதிளில் வரும் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற உள்ள ஏழாம் கட்ட வாக்குப்பதிவு உடன் நாடாளுமன்றத் தேர்தல் தேதி நிறைவடைகிறது. வரும்,  ஜூன் 4 ஆம் தேதி அன்று பதிவான வாக்குகள் எண்ணப்படு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

டி20 உலகக் கோப்பை 2024