தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime: பணம் திருட்டு - சிக்கனில் விஷம் வைத்து மனைவி கொலை

Crime: பணம் திருட்டு - சிக்கனில் விஷம் வைத்து மனைவி கொலை

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 25, 2023 01:55 PM IST

பீரோவில் வைத்திருந்த பணத்தைத் திருடியதாகச் சந்தேகம் அடைந்து சிக்கனில் விஷம் வைத்து மனைவியைக் கணவர் கொலை செய்துள்ளார்.

கொலை
கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

ஜோதிக்கும், அனுமந்தராவுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஜோதியின் மாமியார் சித்தேமா, கணவரின் சகோதரர் கோடீஸ்வரராவ் இருவரும் சேர்ந்து அடிக்கடி ஜோதிடம் சண்டையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் அனுமந்த ராவ் பீரோவில் வைத்திருந்த பானம் திடீரென காணாமல் போய்விட்டது. மனைவிதான் தான் பீரோவில் வைத்திருந்த பணத்தைத் திருடி இருப்பார் என எண்ணி அவரிடம் அனுமந்த ராவ் சண்டை போட்டுள்ளார். பணத்தைத் தான் எடுக்கவில்லை என ஜோதி பலமுறை எடுத்துக் கூறியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அனுமந்த ராவ், ஹோட்டலில் இருந்து சிக்கன் வருவல் வாங்கி வந்துள்ளார். அதில் விஷத்தை கலந்து மனைவியிடம் சாப்பிடக் கொடுத்துள்ளார். கணவர் கொடுத்து சிக்கனை சாப்பிட்ட ஜோதி சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார்.

இதனை அடுத்து ஜோதியின் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜோதிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

எனது கணவர் சிக்கன் வறுவல் சாப்பிடக் கொடுத்தார். அதனைச் சாப்பிட்ட பிறகு எனக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் காவல்துறையினர் ஜோதியின் கணவர் அனுமந்த ராவ், ஜோதியின் மாமியார் சித்தேமா, கணவரின் சகோதரர் கோடீஸ்வரராவ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சாதாரண குடும்ப சண்டைக்காகத் திட்டம் போட்டு சிக்கன் வறுவலில் விஷம் வைத்து மனைவியைக் கணவர் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்