HT Explainer : இன்ஜினியரிங் படிப்புபோல் 4 ஆண்டு இளநிலை படிப்புகள்; சிறப்புகள் என்ன? முழு விவரங்கள் உள்ளே!
4 Years UG Courses : இளநிலை படிப்புகளை 4 ஆண்டுகள் படிக்கும் வகையில், நாடு முழுவதும் வரும் கல்வியாண்டு முதல் 105 பல்கலைக்கழகங்கள் அறிமுகம் செய்கின்றன. அதில் எந்தெந்த பல்கலைக்கழகங்கள் இணைகின்றன. அதன் சிறப்புகள் என்ன என்று தெரிந்துகொள்ளலாம்.

டெல்லி, அலிகர் முஸ்லிம், விஸ்வ பாரதி, அசாம், தேஜ்பூர், ஜம்மு மத்திய, பல்கலைக்கழகம், சிக்கிம், தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் மற்றும் மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் ஆகிய மத்தியப் பல்கலைக்கழகங்கள் இதில் அடக்கம்.
ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம், ஹேம்வதி நந்தன் பகுகுணா கர்வால் பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி அந்தர் ராஷ்ட்ரிய இந்தி விஸ்வ வித்யாலயா, ராஜீவ் காந்தி பல்கலைக்கழகங்களும் 4 ஆண்டுகள் இளநிலைப் படிப்புகளை வழங்கவுள்ளன. இந்த பல்கலைக்கழகங்களோடு, ஹரியானா, தெற்கு பீகார் மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகங்களும் பட்டியலில் இணைந்துள்ளன.
மேலும் 40 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் 18 மாநில தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் 22 மாநிலப் பல்கலைக்கழகங்களும் 4 ஆண்டு இளநிலை படிப்புகளை வழங்க உள்ளன.
