HT Elections Story: ’நாடாளுமன்றத்தேர்தல் 1967’ கரையத் தொடங்கிய காங்கிரஸ்! பிரதமர் ஆன இந்திரா! அதிர்ச்சி தந்த ராஜாஜி!-ht elections story from independence to polls insights into indias 1967 lok sabha elections - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Ht Elections Story: ’நாடாளுமன்றத்தேர்தல் 1967’ கரையத் தொடங்கிய காங்கிரஸ்! பிரதமர் ஆன இந்திரா! அதிர்ச்சி தந்த ராஜாஜி!

HT Elections Story: ’நாடாளுமன்றத்தேர்தல் 1967’ கரையத் தொடங்கிய காங்கிரஸ்! பிரதமர் ஆன இந்திரா! அதிர்ச்சி தந்த ராஜாஜி!

Kathiravan V HT Tamil
Feb 05, 2024 06:10 AM IST

”Lok Sabha Election 1967: கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி பெற்ற தொகுதி எண்ணிக்கைகளை விட 1967 தேர்தலில் 68 தொகுதிகள் குறைந்து 283 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தது”

நாடாளுமன்றத் தேர்தல் 1967
நாடாளுமன்றத் தேர்தல் 1967

நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது.

1952, 1957, 1962  ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத்தேர்தல்களில் வென்று ஜவஹர்லால் நேரு பிரதமர் ஆக இருந்தார். 1964 ஆம் ஆண்டு நேரு இறந்த நிலையில் லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். சாஸ்திரியின் மறைவுக்கு பிறகு 1966ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமர் ஆகி இருந்தார். 

1962ஆம் ஆண்டில் நடந்த சீனப்போர், 1965ஆம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் உடனான அடுத்தடுத்த போர்கள் இந்தியாவின் பொருளாதார சூழலை கடுமையாக பாதித்து இருந்தன.  இதனால் 1967 ஆம் ஆண்டளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்தது.

மேலும் நேரு, சாஸ்திரி ஆகிய தலைவர்களின் அடுத்தடுத்த மறைவுகள் காங்கிரஸ் கட்சிக்குள் தலைமைக்கான போட்டியை அதிகரித்தது. பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கும், துணைப்பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய்க்கும் கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தது. 

நாட்டின் நிலவிய உணவுப்பற்றாக்குறை காங்கிரஸ் கட்சி மீது கடும் அதிருப்தியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. 

தமிழ்நாடு, குஜராத், மேற்குவங்கம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையான போட்டியை கொடுத்தன. 

1967ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 520ஆக அதிகரித்தது. 

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி பெற்ற தொகுதி எண்ணிக்கைகளை விட 1967 தேர்தலில் 68 தொகுதிகள் குறைந்து 283 தொகுதிகளில் வென்று காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தது. இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார். 44 இடங்களை பெற்று ராஜாஜியின் சுதந்திரா கட்சி இரண்டாவது பெரிய கட்சியாக வளர்ந்தது. 

பாஜகவின் முன்னாள் அரசியல் தாய் அமைப்பான ஜனசங்கம் 35 தொகுதிகளை வென்று மூன்றாவது பெரிய கட்சி ஆனது. 

தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக ஆட்சியை பிடித்த திமுக 25 இடங்களை கைப்பற்றி  நாடாளுமன்றத்தின் நான்காவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 

சம்யுக்த சோஷியலிஸ்ட் கட்சி 23 இடங்களிலும், சீனப்போருக்கு பின் பிளவு ஏற்பட்ட பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 23 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 19 இடங்களிலும் வெற்றி பெற்றது. நாடு முழுவதும் 35 தொகுதிகளை சுயேச்சைகள் கைப்பற்றி இருந்தனர். 

 

 

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.