தமிழகம், தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள எம்.பி.க்கள் எத்தனை பேர்?
கேரளாவைச் சேர்ந்த 20 மக்களவை எம்.பி.க்களில் 19 பேர் (95%) குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருப்பதாகவும், அவர்களில் 11 பேர் கடுமையான வழக்குகளை எதிர்கொண்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் சதவீத அடிப்படையில் அதிக எம்.பி.க்கள் குற்ற வழக்குகளை எதிர்கொண்டிருக்கின்றனர்.

திங்களன்று உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவு ஒன்றில், 543 மக்களவை எம்.பி.க்களில் 251 பேர் குற்ற வழக்குகளை எதிர்கொள்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது, அவர்களில் 170 பேர் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
பல்வேறு உயர் நீதிமன்றங்களின் தரவுகளைத் தொகுத்த மூத்த வழக்கறிஞருமான விஜய் ஹன்சாரியா, நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் 83 பக்க அறிக்கையை சமர்ப்பித்தார். கேரளாவைச் சேர்ந்த 20 மக்களவை எம்.பி.க்களில் 19 பேர் (95%) குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருப்பதாகவும், அவர்களில் 11 பேர் கடுமையான வழக்குகளை எதிர்கொண்டிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் சதவீத அடிப்படையில் அதிக எம்.பி.க்கள் குற்ற வழக்குகளை எதிர்கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் எத்தனை எம்.பி.க்கள் மீது குற்ற வழக்கு?
தெலங்கானாவைச் சேர்ந்த 17 எம்.பி.க்களில், 14 பேர் (82%), ஒடிசா 76% (21 இல் 16 பேர்), ஜார்க்கண்ட் 71% (14 இல் 10 பேர்), தமிழ்நாடு 67% (39 இல் 26 பேர்), உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், கர்நாடகா, ஆந்திரா ஆகிய முக்கிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 50% எம்.பி.க்கள் குற்ற வழக்குகளை எதிர்கொண்டனர்.
