TOP 10 INDIA AND WORLD NEWS: ஹிஸ்புல்லா கிளர்ச்சிக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல்.. இந்தியா - உலகம் நிகழ்வுகள்
TOP 10 INDIA AND WORLD NEWS: ஹிஸ்புல்லா கிளர்ச்சிக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் என்பன உள்ளிட்ட இந்தியா - உலகம் நிகழ்வுகள் பற்றிப் பார்க்கலாம்.
TOP 10 INDIA AND WORLD NEWS: ஹிஸ்புல்லா கிளர்ச்சிக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல்.. இந்தியா - உலகம் நிகழ்வுகள் (REUTERS)
TOP 10 INDIA AND WORLD NEWS: இந்தியா மற்றும் உலகம் முழுவதும் நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்த செய்தித்தொகுப்பில் அறிந்துகொள்ளலாம்.
- கேரள திரைத்துறையில் நடிகைகள் மற்றும் துணைநடிகைகளுக்கு பாலியல் வன்கொடுமைகளை முன்னணி நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் செய்ததாக எழுந்தப் புகாரில், அதை உறுதி செய்தது நீதிபதி ஹேமா தலைமையிலான கமிஷன். இதைத்தொடர்ந்து பெண் ஐபிஎஸ் அலுவலர் அடங்கிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
- ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தியை, அவரது மறைவுக்குப்பின் அவரது மகன் சிராக் பஸ்வான் வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் இந்த கட்சியினரின் செயற்குழு கூட்டத்தில் சிராக் பஸ்வான் மீண்டும் தலைவராகியுள்ளார். தற்போது மத்திய அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருக்கும் சிராக் பஸ்வான், இந்த கூட்டத்தில் ஜார்க்கண்ட்,அரியானா, ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டசபையிலும் தங்கள் கட்சியை வளர்த்தெடுப்பது குறித்து பேசினார்.
’லட்சாதிபதிகள்’ திட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு
- கிராமப்பெண்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி அளித்து தொழில் முனைவோராக்கும்’லட்சாதிபதிகள்’ திட்டத்தில் பிரதமர் மோடி, மகாராஷ்டிர மாநிலம், ஜல்கான் நகரில் கலந்துகொண்டார். இத்திட்டத்தின்மூலம் மகளிர் சுய உதவிக்குழுவில் இருக்கும் பெண்களுக்கு, முதல் ஆண்டு ரூ.10ஆயிரம் உதவித்தொகையும், அடுத்த ஆண்டுகளில் ரூ.12,500-ம் வழங்கப்படும். இத்திட்டம்மூலம் 2.35 லட்சம் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 25.8 லட்சம்பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வங்கி கடனை பிரதமர் மோடி வழங்கினார்.
- பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில், மனதின் குரல் நிகழ்ச்சிக்காக வானொலியில் உரையாற்றுகிறார். அதன் 113ஆவது உரையில் பேசிய பிரதமர் மோடி, விண்வெளித்துறையில் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருகிறது எனவும், பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் எனப்பதிவுசெய்தார்.
- கிருஷ்ண ஜென்மாஷ்டமி தினம் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில், ஸ்ரீகிருஷ்ணருக்கும் அர்ஜூனனுக்கும் இடையிலான உரையாடல் முழு மனித குலத்திற்கும் உந்துதல் அளிக்கக்கூடியது என்றார்.
- இந்தோனேஷியாவில் வடக்கு மலுகு மாகாணத்தில்,டெர்னேட் தீவு மற்றும் அதன் அருகிலுள்ள பகுதியில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் 25 பேர் உயிரிழந்தனர். காணாமல்போன பலரை அந்நாட்டை சேர்ந்த மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
ஹிஸ்புல்லா கிளர்ச்சிக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல்
- லெபனான் எல்லைப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சிக் குழுவினர், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. 11 இஸ்ரேல் ராணுவ தளங்கள் மீது தாக்கப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் முயன்றுவருவதால் அப்பகுதியில் பிரச்னை நீடிக்கிறது.
- பிரான்ஸில் வைத்து டெலிகிராம் சி.இ.ஓ பாவெல் துரோவ் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் ரஷ்ய நாட்டைச் சார்ந்தவர். இவர் தனது சகோதரர் நிகோலாய் உடன் இணைந்து கடந்த 2013ஆம் ஆண்டில் டெலிகிராம் செயலியைத் தொடங்கினார். இந்நிலையில் பயங்கரவாத இயக்கங்களுக்குத் துணைபோவதாக பிரான்ஸ் நாட்டு காவல்துறை, அவரை பாரீஸ் அருகேயுள்ள போர்கெட் அருகில் வைத்து கைது செய்தது.
- எக்ஸ் அதிபர் எலான் மஸ்க் டெலிகிராம் அதிபர் பாவெல் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். குறிப்பாக, அதில் வரும் 2030ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் ஒரு மீம் ஒன்றுக்கு லைக் போட்டால் கூட தண்டனை வழங்கப்படும் என விமர்சித்தார்.
- ஜெர்மனியின் சொலிங்ஜென் நகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்ச்சியில் அடையாளம்தெரியாத நபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த கத்திக்குத்துக்கு ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.
டாபிக்ஸ்
தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.