Tamil News  /  Nation And-world  /  Hindus Self-respect Has Awakened Under Pm Modi: Shankaracharya Avimukteshwaranand

Ayodhya Ram Temple: ’நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல; அபிமானிகள்!’ சங்கராச்சாரியார் பல்டி!

Kathiravan V HT Tamil
Jan 22, 2024 07:46 AM IST

”Ayodhya Ram Temple: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ள நிலையில் சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்தின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது”

பிரதமர் நரேந்திர மோடி- சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த்
பிரதமர் நரேந்திர மோடி- சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த்

ட்ரெண்டிங் செய்திகள்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற உள்ள நிலையில் சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்தின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிராண பிரதிஷ்டை செய்வது தொடர்பாக ஏற்கெனவே கருத்து தெரிவித்து இருந்த சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதியின் கருத்து பேசு பொருள் ஆகி இருந்தது.

முழுமையாக கட்டி முடிக்கப்படாத கோயிலுக்கு பிராண பிரதிஷ்டை செய்யக்கூடாது என்றும், திருமணமான பிரதமர் மோடி தனது மனைவியை ஒதுக்கிவிட்டு எந்த சமய நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள கூடாது என்றும், பிரதமர் நரேந்திர மோடி மூன்று முறை மதச்சார்பின்மையை ஏற்றுக் கொண்டதாக உறுதி மொழி எடுத்துக் கொண்ட நிலையில் அவர் நேரடியாக எந்த சமயப்பணிகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் கருத்து தெரிவித்து இருந்தார். மேலும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தமக்கு எந்த அழைப்பும் வரவில்லை எனவும் கூறி இருந்தார்.

இந்த நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசி உள்ள சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, நரேந்திர மோடி பிரதமரானதன் மூலம் இந்துக்களின் சுயமரியாதை எழுச்சி பெற்றுள்ளது. நான் பிரமருக்கு எதிரானவன் அல்ல அபிமானி என கூறி உள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்துக்களுடன் வலுவாக நின்ற ஒரே பிரதமர் மோடி மட்டுமே. நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல மோடியின் அபிமானிகள் என்று பலமுறை பகிரங்கமாகச் சொல்லிவிட்டோம். சுதந்திர இந்தியாவில் மற்ற பிரதமர்களை காட்டிலும் மிகவும் துணிச்சலானவர்.

சமீப காலங்களில் மத்திய அரசின் முடிவுகளை தாம் எப்போதும் வரவேற்பதாகச் சுட்டிக்காட்டிய சங்கராச்சாரியார், எங்களை மோடிக்கு எதிரானவராக காட்ட ஊடகங்களான உங்களுக்கு திட்டமுள்ளதாக கூறிய சங்கராச்சாரியார், 370-வது பிரிவு ரத்து, ஸ்வச் அபியான் திட்டம் உள்ளிட்டவைகளை நாங்கள் வரவேற்று உள்ளோம் என கூறி உள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் சிறப்பம்சங்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்ப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு இன்று பிற்பகல் 12 மணியளவில் பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வுக்காக நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தி உள்ளார். அரசியல், வணிகம், சினிமா உள்ளிட்ட பல்வேறு மிக முக்கிய பிரபங்களுக்கு மட்டும் இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூன்று அடுக்குகளைக் கொண்ட சன்னதியாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலானது ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் கருடன் ஆகிய சிலைகள் செதுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைப் பயன்படுத்தி இந்த சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய கட்டட கலை பாணியான நாகரா பாணியில் கட்டப்பட்ட கோவில் வளாகம், 380 அடி நீளம், 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரத்தில் அழகிய வேலைப்படுகளுடன் கட்டப்பட்டுள்ளது.

கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டுள்ளது. நிருத்திய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனா மண்டபம், கீர்த்தனை மண்டபம் ஆகிய ஐந்து மண்டபங்களை கொண்டுள்ள ராமர் கோவிலின் கருவறையில், குழந்தை ராமர் (ராம் லல்லா) சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

WhatsApp channel