HBD Varun Gandhi : பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தின் வாரிசு! பாஜக எம்பி வருண் காந்தி பிறந்த தினம் இன்று!
HBD Varun Gandhi : இவர் எம்பி மட்டுமல்ல செய்தித்தாள்களில் கட்டுரை எழுதுபவரும் ஆவார். டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், எக்கனாமிக் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஏசியன் ஏஜ், தி இந்து ஆகிய செய்தித்தாள்களில் எழுதியுள்ளார்.

ஃபெரோஸ் வருண் காந்தி, 1980ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி பிறந்தவர். இவர் மக்களவையில் மூன்றாவது முறை எம்பியாக உள்ளது. பிலிபிஃட் இவருடைய தொகுதியாகும். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ராஜ்நாத் சிங் குழுவில் பணியமர்த்தப்பட்டார். இவர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தியின் மகன். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரன். இந்தியாவின் முதல் பிரதமர் ஐவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேரன். மற்றுமொரு பிரதமர் ராஜிவ் காந்தியின் சகோதரர் மகன். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு சகோதரர்.
ஃபெரோஸ் வருண் காந்தி, டெல்லியில் சஞ்சய் காந்தி மற்றும் மேனகா காந்தி தம்பதிக்கு 1980ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி பிறந்தார். வருண் பிறந்த சிறிது காலத்திலே இந்திரா காந்தி பதவிக்கு வந்தார். அதே ஆண்டு வருண் மூன்று மாத குழந்தையாக இருந்தபோது, வருணின் தந்தை சஞ்சய் காந்தி விமான விபத்தில் அகால மரணமடைந்தார். வருண் காந்தி 4 வயதாக இருந்போது, 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்திரா காந்தி கொல்லப்பட்டார்.
வருண், டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் பள்ளி மற்றும் ரிஷிவேலி பள்ளியில் படித்தார். பள்ளியில் அவர் மாணவர் கவுன்சிலில் பதவி வகித்தார். இவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி பட்டம் பெற்றார்.
1999ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது வருண் காந்திக்கு பிலிஃபிட் தொகுதி அறிமுகமானது. அந்த தொகுதியியை அவரது தாய் மேனகா காந்திதான் அவருக்கு அறிமுகப்படுத்தினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் மேனகா காந்தி அங்கம் வகித்தார். மேனகா காந்தியும், வருணும், 2004ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தனர். 2004ம் ஆண்டு தேர்தலில், வருண் காந்தி, 40க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.
2009ம் ஆண்டு நடைபெற்ற பொதுதேர்தல்களில், பிலிஃபிட் தொகுதியில் அவரது தாய் மேனகா காந்திக்கு பதில் வருண் காந்தியை போட்டியிட வைக்க பாஜக முடிவெடுத்தது. அவர் அந்த தொகுதியில் வெற்றிபெற்றவர். அவரை எதிர்த்து போட்டியிட்ட வி.எம். சிங் என்பவரை 2,81,501 வாக்குகள் வித்யாசத்தில் தோர்க்கடித்தார். இந்த வெற்றி காந்தி குடும்பத்தில் அந்த தேர்தலில் போட்டியிட்ட மற்ற மூவர் பெற்ற வாக்குகளையும், வித்யாசங்களையும் விட அதிகம் என்பதால், இது மிகவும் கொண்டாடப்பட்டது. அந்த தேர்தலில் போட்டியிட்ட சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேனகா காந்தி ஆகிய மூன்றுபேரும் டெபாசிட் இழந்தனர். இவர் இஸ்லாமியர் குறித்து பேசியதற்காக குற்றம் சுமத்தப்பட்டார்.
சமூக போராளி அன்னா ஹசாரே போராட்டம் நடத்த அரசு மறுத்தபோது, வருண் காந்தி தனது அலுவல் முகாமில் அவருக்கு போராடிக்கொள்ள அனுமதி கொடுத்தார். அன்னா ஹசாரேவை ஆதரித்ததன் மூலம் ஊழலை எதிர்த்த முதல் அரசியல்வாதி என்ற பெயர் பெற்றார்.
2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வருண் காந்தியை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக ராஜ்நாத் சிங் அறிவித்தார். பொதுச்செயலாளர்களிலேயே இளமையானவர் என்ற பெயரை வருண் காந்தி பெற்றார். அதே ஆண்டு மேற்குவங்கத்தின் பொறுப்பை ஏற்றார். 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் செய்தித்தாள்கள் ஒரு செய்தியை வெளியிட்டன. அதில் வருண்காந்தி மட்டும்தான் எம்பிகளுள்ளே உள்ளூர் வளர்ச்சி நிதியை குறிப்பிட்ட கால அவகாசத்துக்கள் செலவிட்டு முடிந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவரது பணத்தை கல்வி வளர்ச்சி, சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு செலவழித்திருந்தார். இவரது பதவிக்காலத்திலேயே இவரது மொத்த வளர்ச்சி நிதை ரூ.25 கோடியையும் வளர்ச்சி பணிகளுக்காக செலவிடப்பட்டதை உறுதி செய்தார்.
இவர் எம்பி மட்டுமல்ல செய்தித்தாள்களில் கட்டுரை எழுதுபவரும் ஆவார். டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், எக்கனாமிக் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ், தி ஏசியன் ஏஜ், தி இந்து ஆகிய செய்தித்தாள்களில் எழுதியுள்ளார். இவர் கவிதைகளும் எழுதியுள்ளார். இவர் இந்திய கிராமப்புற பொருளாதாரம் குறித்த புத்தகமும் எழுதியுள்ளார்.
இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு ஹெச்.டி.தமிழ் வாழ்த்து கூறுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்