தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Hbd Ronald Reagan An Mgr In America Too Do You Know The Story Of The Famous Movie Actor

HBD Ronald Reagan : அமெரிக்காவிலும் ஒரு எம்.ஜி.ஆரா? அதிபரான சினிமா நடிகரின் கதை தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Feb 06, 2024 05:00 AM IST

HBD Ronald Reagan : அமெரிக்காவிலும் ஒரு எம்.ஜி.ஆரா? அதிபரான சினிமா நடிகரின் கதை தெரியுமா?

HBD Ronald Reagan : அமெரிக்காவிலும் ஒரு எம்.ஜி.ஆரா? அதிபரான சினிமா நடிகரின் கதை தெரியுமா?
HBD Ronald Reagan : அமெரிக்காவிலும் ஒரு எம்.ஜி.ஆரா? அதிபரான சினிமா நடிகரின் கதை தெரியுமா?

ட்ரெண்டிங் செய்திகள்

ஜான் எட்வர்ட் ரீகன் மற்றும் நெல்லே ரீகன் ஆகியோரின் இரண்டாவது மகன் ரொனால்ட் ரீகன், இவரது தந்தை ஷூ விற்பவர். இவரது செல்லப்பெயர் டச் என்பதாகும். சில ஆண்டுகள் வரை பல நகரங்களுக்கு தொடர்ந்து இடம்பெயர்ந்துகொண்டே இருந்தார். காரணம் இவரது தந்தையின் குடிப்பழக்கம் ஆகும்.

இதனால் அவருக்கு ஒரு நிரந்தர வேலை இல்லை. அவரது குடும்பத்தினர் 1920ம் ஆண்டு இல்லினாய்ஸ், டிக்ஸனில் தங்கினர். அவர்கள் குடும்பத்தின் வறுமை மற்றும் தந்தையின் மதுப்பழக்கம் ஆகியவற்றை கடந்து ரீகன் டிக்ஸனில் தங்கிய காலங்களை மகிழ்ச்சிகரமான ஒன்றாக கூறுகிறார். இல்லினாய்ஸில் உள்ள யுரேகாவின் யுரேகா கல்லூரியில் கால் பந்தாட்ட வீரராகவும், நாடக மன்றத்திலும் அதிகளவில் ஈடுபட்டார்.

ஆனால் படிப்பில் தேர்ச்சி மற்றுமே பெற்றார். கல்லூரியின் பிரபலமான மாணவராக இருந்தார். வகுப்பு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாதாரம் மற்றும் சமூகவியலில் இளங்களை பட்டம் பெற்றார். பின்னர் வானொலி பிராட்காஸ்டிங் பணியில் சேர முடிவெடுத்தார். இவர் ஒரு வானொலி நிலையத்தில் வர்ணணையாளர் ஆனார். அதில் யுரேகாக கல்லூரியின் கால்பந்தாட்டம் குறித்து பேசினார்.

பின்னர் டெஸ் மொய்னசில் உள்ள வானொலி நிலையத்திலும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினார். இவர் சிகாகோ கப்ஸ் பேஸ்பால் விளையாட்டு குறித்து ஒலிபரப்பிய நிகழ்ச்சியால் இவர் மாகாணம் முழுவதிலும் பிரபலமானார்.

1937ம் ஆண்டு ரீகன் கலிபோர்னியாவில் ஒரு பயிற்சியில் கலந்துகொண்டார். அங்கிருந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். வார்னர் பிரதர்ஸின் ஸ்கிரீன் டெஸ்டில் வெற்றிகரமாக கலந்துகொண்டார். நல்ல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க தொடங்கினார். அடுத்த 27 ஆண்டுகளில் 50 திரைப்படங்களில் நடித்தார்.

பிரதர் ரேட் படத்தில் நடித்த போது அவருடன் நடித்த ஜேன்விமனுடன் திருமணம் நிச்சயம் செய்துகொண்டு இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் 1941ம் ஆண்டு பிறந்தார். அவரது பெயர் மவுரீன், பின்னர் 1945ம் ஆண்டு மைக்கேல் என்ற மகனை தத்தெடுத்துக்கொண்டார்.

இவர்களின் திருமண வாழ்க்கை 1948ல் விவாகரத்தில் முடிந்தது. ரீகன்தான் விவாகரத்து பெற்ற ஒரே அமெரிக்க அதிபர். பின்னர் அவர் 1949ம் ஆண்டு நான்சி டேவிஸ் என்ற நடிகையை சந்தித்தார். இவர்கள் 1952ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவரும் சேர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கினர். இருவருமே பழமைவாதிகளாக இருந்தனர்.

இவரது சினிமா புகழ் மங்க துவங்கியதும், இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க துவங்கினார். அமெரிக்காவில் அதிபரான ஒரே திரைப்பட நடிகரும் இவர்தான். சிறப்பாக பேசக்கூடியவர். மிகுந்த பழமைவாதியாகவும், கம்யூனிச கொள்கைகளை தீவிரமாக எதிர்ப்பவராகவும் இருந்தார். இன்று பிறந்தநாள் காணும் அவரது நினைவுகளை ஹெச்.டி. தமிழ் பகிர்ந்தகொள்கிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel