தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Hbd Irom Sharmila The Hero Of Manipur Today Is Iron Lady Irom Sharmilas Birthday

HBD Irom Sharmila : மணிப்பூரின் வீர மங்கை! இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா பிறந்த தினம் இன்று!

Priyadarshini R HT Tamil
Mar 14, 2024 06:00 AM IST

Iron Sharmila : அதே ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி அவரது பிரிட்டிஷ் காதலர் டேஷ்மாண்ட் அந்தோணி பெல்லமைன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2019ம் ஆண்டு மே 12ம் தேதி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். நிக்ஸ் ஷக்தி, ஆட்டம் தாரா என்பது அவர்களின் பெயர்கள்.

HBD Irom Sharmila : மணிப்பூரின் வீர மங்கை! இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா பிறந்த தினம் இன்று!
HBD Irom Sharmila : மணிப்பூரின் வீர மங்கை! இரும்பு பெண்மணி இரோம் ஷர்மிளா பிறந்த தினம் இன்று!

ட்ரெண்டிங் செய்திகள்

இரோம் சானு ஷர்மிளா, 1972ம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிறந்தவர். மணிப்பூரின் இரும்பு பெண்மணி. இந்தியாவின் குடியுரிமை போராளி. அரசியல் செயல்பாட்டாளர். கவிஞர்.

மணிப்பூரில் பிறந்தவர். ஆயுதப்படை அதிகாரங்கள சட்டம் என்பது, சந்தேகப்பட்டால் மீது உத்தரவு இல்லாமல் அவர்களின் வீடுகளில் தேடுதல் வேட்டை மற்றுது கைது என செய்யலாம். சந்தேகம் இருந்தால் அவர்களின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தலாம் என்பதாகும். இவர் தனது உண்ணாவிரதத்தை 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 9 ம்தேதி முடித்தார்.

16 ஆண்டுகள் உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்ட பெரும் போராளி என்பதால், இவர் மணிப்பூரின் இரும்புப்பெண்மணி என்று அழைக்கப்படுகிறார். உலகின் நீண்ட கால உண்ணாவிரத பேராட்டத்தை மேற்கொண்டவர் என்று அழைக்கப்படுகிறார். இவரது போராட்ட காலத்தில் உணவும், தண்ணீரும் உட்கொள்ளவில்லை.

இரோம் ஷர்மிளா மணிப்பூரில் பிறந்து வளர்ந்தவர். இந்தியாவின் வடகிழக்கில் உள்ள 7 சகோதரிகள் என்ற மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இங்கு எப்போதும் வன்முறைகள் வெடித்துக்கொண்டே இருக்கும். 2015ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 5,500 பேர் அரசியல் வன்முறைகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதனால் தான் அரசு அந்த மாநிலங்களுக்கு கடுமையான சட்டத்தை விதித்தது.

இவர் ஏற்கனவே உள்ளூர் அமைதி இயக்கங்களில் கலந்துகொண்டவர். 2000மாவது ஆண்டு நவம்பர் 2ம் தேதி பேருந்து நிலையத்தில் காத்திருந்த 10 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் மாலோம் படுகொலை என்று அழைக்கப்படுகிறது.

அப்போது இரோம் ஷர்மிளாவுக்கு வயது 28. அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, அவர் தனது போராட்டத்தை துவக்கினார். உடனடியாக அந்த சிறப்பு சட்டத்தை திரும்பப்பெறவேண்டும் என்று அவர் நவம்பர் 5ம் தேதி முதல் உண்ணாவிரதம் மேற்கொண்டார். மூன்று நாள் கழித்து இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக அவருக்கு மூக்கு வழியாக உணவு வழங்கப்பட்டது.

அவர் 2017ம் ஆண்டு ஆகஸ்டில் தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார். அவர் அடுத்த மாநில தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார். அதே ஆண்டு மணிப்பூரில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட அவருக்கு 90 வாக்குகளே கிடைத்தன. போராளிகளை என்றும் மக்கள் அரசியல்வாதிகளாக்க விரும்பவில்லை அல்லது போராளிகளுக்கு அரசியல்வாதிகளாகும் பக்குவம் இல்லை என்று பத்திரிக்கைகள் அவரின் தோல்வியை விமர்சித்தன.

அதே ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி அவரது பிரிட்டிஷ் காதலர் டேஷ்மாண்ட் அந்தோணி பெல்லமைன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். 2019ம் ஆண்டு மே 12ம் தேதி இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். நிக்ஸ் ஷக்தி, ஆட்டம் தாரா என்பது அவர்களின் பெயர்கள்.

அவர் பிறந்த நாளான இன்று அவர் குறித்த சில தகவல்களை ஹெச்.டி தமிழ் பகிர்ந்துகொள்கிறது. அவர் வாழ்வில் எல்லா வளமும், நலனும் பெற்று வாழ்த்துகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்