HBD Fali Sam Nariman : சட்ட அறிஞர் ஃபாலி சாம் நாரிமன் பிறந்த தினம் இன்று!-hbd fali sam nariman today is the birthday of legal scholar fali sam nariman - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hbd Fali Sam Nariman : சட்ட அறிஞர் ஃபாலி சாம் நாரிமன் பிறந்த தினம் இன்று!

HBD Fali Sam Nariman : சட்ட அறிஞர் ஃபாலி சாம் நாரிமன் பிறந்த தினம் இன்று!

Priyadarshini R HT Tamil
Jan 10, 2024 06:00 AM IST

HBD Fali Sam Nariman : சட்ட அறிஞர் ஃபாலி சாம் நாரிமன் பிறந்த தினம் இன்று!

HBD Fali Sam Nariman : சட்ட அறிஞர் ஃபாலி சாம் நாரிமன் பிறந்த தினம் இன்று!
HBD Fali Sam Nariman : சட்ட அறிஞர் ஃபாலி சாம் நாரிமன் பிறந்த தினம் இன்று!

இவர் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் 22 ஆண்டுகள் வழக்கறிஞராக இருந்தார். 1961ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இவர் 1999ம் ஆண்டு குடியரசுத்தலைவரால் ராஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் அங்கு இருந்தார்.

1970களில் இவர் கூடுதல் சொலிசிடர் ஜெனரலாகவும் இருந்தார். ஒரு வழக்கறிஞராக சிறுபான்மையினர் மற்றும் மனித உரிமைக்காக குரல் கொடுத்தார்.

இவர் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நிறைய தலைமை பொறுப்பு வகித்துள்ளார்.

இந்திய பார் கவுன்சிலின் தலைவராக இருந்துள்ளார். ஆசிய, பசிபிக் சட்ட சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.

மனித உரிமை நிரந்தர குழுவின் நிறுவன தலைவராக இருந்தார்.

சர்வதேச சட்ட கமிஷசனின் நிர்வாக அதிகாரியாக இருந்தார்.

இதுபோல் பல்வேறு உயர் பதவிகளில் இருந்துள்ளார்.

இவர் பார் கவுன்சிலுக்கு நியமிக்கப்பட்டபோது, பல்வேறு கமிட்டிகளில் பணியாற்றினார். விதிகள் கமிட்டி, அறம் கமிட்டி, வெளியுறவுத்துறைக்கான ஆலோசனை கமிட்டி, வெளியுறவுத்துறைக்கான நிலைக்குழு ஆகியவற்றில் பணியாற்றினார்.

இவர் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் 1955ம் ஆண்டு பாப்சி நாரிமன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இவர் எழுதிய புத்தகங்கள்

Democracy as a Way of Life

The Indian Constitution - An Experiment in Unity and Diversity

Zoroastrianism - the Faith of the Parsis in India

Judicial Power and its Impact on Legislation

Preventive Detention and Persecution of Political Opponents

Primacy of the Chief Justice of India

Freedom of Information and the Press

Freedom of Expression and World Peace

Judicial Aspects of Human Rights Protection in India

Trends in the Internationalism of Human Rights Law

Judges and Lawyers in the USSR Changing Perceptions

Illegality of the Constitution 59th Amendment - Are Courts the Only Safeguards?

Judicial Valour and Legal Aid

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.