ஜெகஜ்ஜால ப்ராடு நித்தியானந்தா! என்னது அமெரிக்காவையும் ஏமாத்திடாரா?
அமெரிக்காவில் உள்ள ரிச்மண்ட், வர்ஜீனியா, டேடன், ஓஹியோ, புளோரிடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களும் கைலாசாவுடன் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா முழுக்க இருக்கும் 30 நகரங்களுடன் நித்தியானந்தாவின் கைசாலா நாடு கலாச்சார ஒப்பந்தத்தைப் போட்டுள்ளதாக வெளியாகி உள்ள சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
பாலியல் புகார் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் குஜராத் மற்றும் கர்நாடகா, தமிழக காவல்துறையால் தேடப்படும் சாமியார் நித்தியானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது பக்தர்களுக்காக தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு சத்சங்க உரையாற்றி வந்தார். இந்நிலையில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.
அவர் வெளியிட்ட பதிவில், நான் இறக்கவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். 27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என கூறியிருந்தார். அதன்பிறகு அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் என்னால் உணவு சாப்பிட முடியவில்லை. எனக்கு தூக்கம் வரவில்லை என கூறப்பட்டிருந்தது. இப்படித்தான் நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தாலும் உலகமே தன்னை பற்றி பேசும் வகையில் ஏதோ ஒன்றை செய்து கொண்டிருப்பார்.
அந்த வகையில் தான் கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு நித்தியானந்தா பரபரப்பை கிளப்பி வருகிறார். இந்த நிலையில் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம் என்ற பெயரில் அமெரிக்காவின் 30 நகரங்களை நித்தியானந்தா ஏமாற்றியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா முழுக்க இருக்கும் 30 நகரங்களுடன் கைசாலா நாடு கலாச்சார ஒப்பந்தத்தைப் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. 30 நகரங்களுடன் கைலாசா பல்வேறு சிஸ்டர் சிட்டி ஒப்பந்தங்களைப் போட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ரிச்மண்ட், வர்ஜீனியா, டேடன், ஓஹியோ, புளோரிடா உள்ளிட்ட பல்வேறு நகரங்களும் கைலாசாவுடன் இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோல பல நகரங்களை கைலாசா ஏமாற்றியுள்ளதாக பாக்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தால் தற்போது கைலாசாவுடன் ஒப்பந்த நகரங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டதாக தெரிகிறது.
ஏற்கனவே ஐ.நா அமைப்பின் பொருளாதார மாநாட்டில் சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் குழு கூட்டத்தில் கைலாசா குடியரசு சார்பில் நித்தியானந்தாவின் பிரதிநிதி பெண்கள் சிலர் கலந்து கொண்டனர். அதையும் நித்தியானந்தா தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டார்.
இந்நிலையில் கற்பனையான நாட்டிலிருந்து பங்கேற்ற பிரதிநிதிகளுக்கு ஐ.நா எப்படி அங்கீகாரம் அளிக்கலாம் என கேள்வி எழுந்தது. அதற்கு ஐக்கிய நாடுகள் சபை அதிகாரி கைலாசா பிரதிநிதிகள் ஐ.நா சபை கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஐ.நா சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட தலைப்புடன் சற்றும் தொடர்பில்லாத கருத்து நித்தியானந்நதாவின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது. இதனால் அது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.