Accident in Haryana: அப்பளம் போல் நொறுங்கிய கார்.. 2 டெல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பலி-haryana two delhi police inspectors killed in car accident in sonepat read more details - HT Tamil ,தேசம் மற்றும் உலகம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Accident In Haryana: அப்பளம் போல் நொறுங்கிய கார்.. 2 டெல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பலி

Accident in Haryana: அப்பளம் போல் நொறுங்கிய கார்.. 2 டெல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பலி

Manigandan K T HT Tamil
Jan 09, 2024 12:58 PM IST

திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் குண்ட்லி எல்லை அருகே அவர்களுக்கு முன்னால் வந்த லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது.

அப்பளம் போல் நொறுங்கி இருக்கும் கார் (HT Photo)
அப்பளம் போல் நொறுங்கி இருக்கும் கார் (HT Photo)

வடமேற்கு மாவட்ட சிறப்பு பணியில் இருந்த தினேஷ் பெனிவால் மற்றும் டெல்லியில் உள்ள ஆதர்ஷ் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய ரன்வீர் சிங் சாஹல் ஆகியோர் என போலீசார் அடையாளம் கண்டனர்.

பெனிவால் ஜஜ்ஜரில் உள்ள தாதன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், சாஹல் ஜிந்த் நர்வானாவைச் சேர்ந்தவர்.

திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், அப்போது லாரி ஓட்டுநர் ஒருவர் திடீரென பிரேக் போட்டதாகவும், கார் அதன் மீது மோதியதாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அடர்த்தியான மூடுபனிக்கு மத்தியில் விபத்து நடந்தபோது பெனிவால் காரை ஓட்டிச் சென்றார். அவர்கள் டெல்லியில் இருந்து சோனேபட் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அவர்களிடன் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சோனேபட் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

இதனிடையே, ஹரியானா மாநிலத்தில் செக்டார் 5-ல் உள்ள மொபே கிளப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த எஸ்யூவி காரின் ஜன்னலை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கம் அடங்கிய பையை திருடர்கள் ஞாயிற்றுக்கிழமை திருடிச் சென்றனர்.

இமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பாவைச் சேர்ந்த 21 வயதான திவ்யான்ஷு, தனது நண்பர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த சுர்ஜித் மற்றும் சம்பாவைச் சேர்ந்த ஷப்னம் ஆகியோருடன் மஹிந்திரா தார் காரில் ஒன்றாக பயணித்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேச பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பல் மருத்துவக் கல்லூரியில் ஷப்னமின் பட்டத்தைப் பெறுவதற்காக அவர்கள் சம்பாவிலிருந்து பௌந்தா சாஹிப்பிற்குச் சென்று கொண்டிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில், அவர்கள் பஞ்ச்குலாவில் செக்டர் 5 இல் உள்ள மோபே கிளப்பைப் பார்வையிட நின்றனர். இரவு 11.30 மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குத் திரும்பியபோது, பின்புற ஜன்னல் உடைக்கப்பட்டு, மூன்று பைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதில் ஒரு பையில் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் வங்கி ஆவணங்கள், காசோலைகள் இருந்தன.

திவ்யான்ஷுவின் புகாரின் பேரில், செக்டார் 5 காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 379 (திருட்டு) இன் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தடயங்களுக்காக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

 

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.